உலகின் மிக நீண்ட ரயில் பயணம்: போர்ச்சுகல் முதல் சிங்கப்பூர் வரை... 21 நாட்கள்... 13 நாடுகள்

உலகின் மிக நீண்ட ரயில் பயணம்: ரயில் போக்குவரத்து, மக்கள் அதிகம் விரும்பும் போக்குவரத்தில் முதலிடம் வகிக்கிறது. குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான பயணமாக இருப்பதால், பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 25, 2024, 11:56 AM IST
  • உலகின், மிக நீண்ட தூரம் செல்லும் ரயிலைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • சிங்கப்பூரின் ஷாப்பிங்கையும், ஸ்பெயினின் அழகையும் அனுபவிக்க முடியும்.
  • ரயிலில் பயணம் செய்வதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
உலகின் மிக நீண்ட ரயில் பயணம்: போர்ச்சுகல் முதல் சிங்கப்பூர் வரை... 21 நாட்கள்... 13 நாடுகள் title=

உலகின் மிக நீண்ட ரயில் பயணம்: ரயில் போக்குவரத்து, மக்கள் அதிகம் விரும்பும் போக்குவரத்தில் முதலிடம் வகிக்கிறது. குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான பயணமாக இருப்பதால், பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். நாட்டின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு செல்லும் நீண்ட ரயில் பயணங்கள் மட்டுமல்லாது, குறுகிய பயணங்களுக்கும் ரயில் போக்குவர்த்து சிறந்த தேர்வாக உள்ளது என்றால் மிகையில்லை. இந்நிலையில், உலகின், மிக நீண்ட தூரம் செல்லும் ரயிலைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இதில் பயணம் செய்யும் போது, நீங்கள் பாரிஸின் இன்பங்களையும், சிங்கப்பூரின் ஷாப்பிங்கையும், ஸ்பெயினின் அழகையும் அனுபவிக்க முடியும். தாய்லாந்தின் மத்தியிலும் பயணிக்கலாம். ஆம், உலகில் ஒரு ரயில் ஒன்று அல்லது இரண்டு நாடுகளுக்கு மட்டுமல்ல, 13 நாடுகளுக்கும் பயணிக்கிறது.

13 நாடுகளில் பயணிக்கும் ரயில்

போர்ச்சுகலில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் ரயில் உலகின் மிக நீண்ட ரயில் பயணமாகும். இந்த ரயில் 13 நாடுகளை உள்ளடக்கிய பயணத்தையும், மிக சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.

 21 நாட்களுக்கான ரயில் வாழ்க்கை

ரயில் பயணத்தை நிறைவு செய்ய 21 நாட்கள் ஆகும். இந்த ரயிலில் ஏறினால், 21 நாட்கள் பல்வேறு நாடுகளை ரசித்துக்கொண்டே செல்லலாம். பயணத்தின் போது 11 இடங்களில் ரயில் நிற்கிறது. இருப்பினும், வானிலை மோசமாக இருந்தால், பயண நேரம் அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க | அனைவருக்கும் இலவச பயணம்... இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் தேவையில்லை

எந்தெந்த நாடுகள் வழியாக செல்கிறது?

18,755 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் இந்த ரயில், போர்ச்சுகலின் அல்கெர்னியில் இருந்து புறப்பட்டு ஸ்பெயின், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து வழியாக சிங்கப்பூரை சென்றடைகிறது. வழியில் பாரிஸ், மாஸ்கோ, பெய்ஜிங், பாங்காக் போன்ற நகரங்களை கடந்து செல்கிறது. இது உங்களை ஐரோப்பாவின் அழகான நாடுகளுக்கு அழைத்துச் செல்லும் அதே வேளையில், சைபீரியாவின் குளிர் பிரதேசங்களின் இன்பத்தையும் தரும்.

டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

நீண்ட தூரம் செல்லும் ரயில் என்பதால், அதிக நேரம் எடுக்கும் என்பதால், இந்த சிறப்பு ரயிலின் கட்டணமும் அதிகமாக இருக்கும் என, மக்கள் நினைக்கின்றனர், ஆனால், அப்படி இல்லை. இந்த ரயிலின் கட்டணம் 1350 அமெரிக்க டாலர்கள் மட்டுமே. இதை இந்திய ரூபாயில் பார்த்தால் தோராயமாக ரூ.1,13,988.98 ஆகும், அதாவது ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு வெறும் ஒரு லட்ச ரூபாயில் பயணிப்பீர்கள்.

ரயிலில் உணவு மற்றும் பான ஏற்பாடுகள்

நீண்ட தூரம் செல்லும் இந்த ரயிலில், டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு உணவு மற்றும் பானங்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சமைத்த உணவு மற்றும் தங்குமிடத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் ரயில் கட்டணத்தில் அடங்கும். உலகின் மிக நீளமான ரயில் பயணத்தின் தொடக்கமானது போடென்-வியன்டியன் ரயில் பாதையின் திறப்பு மூலம் சாத்தியமானது.

ரயிலில் பயணம் செய்வதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் 

நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்ய விரும்பினால், பயணம் செய்வதற்கு முன் சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். வானிலை, தேவையான ஆவணங்கள், இருக்கை தேர்வு, இரண்டு ரயில்களுக்கு இடையிலான இணைப்பு போன்றவற்றைச் சரிபார்த்து, டிக்கெட்டை முன்பதிவு செய்து உங்கள் பயணத்தை கவனமாக திட்டமிடுங்கள்.

மேலும் படிக்க | ரூ.10,000 SIP மூலம் ரூ.1 கோடி கார்பஸ் சேர்க்க எவ்வளவு காலம் ஆகும்? முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News