ஹைதராபாத்: ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்திக்காக போடப்பட்ட பந்தல், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. கோவிட் -19 தடுப்பூசி குப்பிகளின் மேல் விநாயகரும் அவரது வாகனமான எலியும் நிற்பதுபோல பந்தலில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. தடுப்பூசி விநாயகரை மக்கள் வணங்குகின்றனர்.
விக்னங்களை, கவலைகளைப் போக்கும் விநாயகருக்கு பல பெயர்கள் உண்டு. விக்ன விநாயகர், மஞ்சள் பிள்ளையார், அருகம்புல் பிள்ளையார், ஆற்றங்கரை பிள்ளையார் என அடுக்கிக் கொண்டே போகலாம். இப்போது அவருக்கு பட்டப் பெயர்களில் ஒன்று கூடிவிட்டது. தற்போது தடுப்பூசி பிள்ளையாராக அவதாரம் எடுத்துவிட்டார் விநாயகர்!
ஃபியூச்சர் பவுண்டேஷன் சொசட்டியில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த சொசைட்டியின் தலைவர் சச்சின் சந்தன் சிலையை உருவாக்க உதவியுள்ளார். "கடந்த 25 ஆண்டுகளாக, விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது நாங்கள் இங்கு விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுகிறோம்" என்று அவர் கூறுகிறார்.
Telangana | A pandal in Hyderabad has installed an eco-friendly Ganesha idol on COVID vaccine vials model, to motivate people to get jabbed
"People are still hesitant to vaccines.We request them to get vaccinated. We're following COVID protocols," said organiser Sachin (11.09) pic.twitter.com/dXHF2Z7c98
— ANI (@ANI) September 11, 2021
"12 ஆண்டுகளாக நாங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளை (eco-friendly idols) உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். இந்த முறை, விநாயகர் சிலை மூலமாக கோவிட் -19 தடுப்பூசியை ஊக்குவிக்கும் யோசனையை நாங்கள் முயற்சி செய்தோம். முதலில் மூன்று பிரம்மாண்டமான தடுப்பூசி குப்பிகளை உருவாக்கினோம். அவற்றில் ஒன்றில் மூஷிக வாகனரான விநாயகர் சிலையை வைத்துள்ளோம். மற்ற இரண்டில் விநாயகரின் வாகனமான எலிகளின் சிலைகளை வைத்திருக்கிறோம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருக்கிறோம். தடுப்பூசி போர்ட்டலில் மக்கள் பதிவு செய்து கொண்டு, கோவிடுக்கு எதிரான நோய் தடுப்பைப் பெற வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
ALSO READ | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு
"தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று பிள்ளையார் சிலைகளின் மூலம் சமூக செய்தியை நாங்கள் தருகிறோம்" என்று சச்சின் கூறினார்.
கோவிட் -19 தடுப்பூசியை ஊக்குவிக்கும் யோசனையை பக்தர்கள் பாராட்டினார்கள். அங்கு வந்திருந்த பக்தர்களில் ஒருவரான லக்ஷ்மி, “இந்தப் பந்தலைப் பார்த்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நான் ஒவ்வொரு வருடமும் பிள்ளையாரின் ஆசீர்வாதத்தை பெற இங்கு வருகிறேன்” என்று தெரிவித்தார்.
கோவிட் -19 கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளுக்கு மத்தியில் செப்டம்பர் 10-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தொடங்கியது. இந்தியாவின் பல மாநிலங்களில் பத்து நாட்கள் வரை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
ALSO READ | தும்பிக்கை முகத்தானை நம்பிக்கையுடன் வழிபடுவோம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR