தன்னை பற்றிய வீடியோக்களை உடனே நீக்க வேண்டும்! ஏஆர் ரகுமான் நோட்டீஸ்!

ரகுமான் விவாகரத்து பற்றிய அவதூறு கட்டுரைகளையும் வீடியோக்களையும் உடனடியாக நீக்காவிட்டால் உரிய சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Nov 23, 2024, 07:16 PM IST
    அவதூறு கருத்துக்கு எதிராக ஏ ஆர் ரகுமான் நோட்டீஸ்.
    விவாகரத்து குறித்து அவதூறு பரப்பியவர்களுக்கு பதிலடி.
    உடனே வீடியோக்களை நீக்க கோரிக்கை.
தன்னை பற்றிய வீடியோக்களை உடனே நீக்க வேண்டும்! ஏஆர் ரகுமான் நோட்டீஸ்! title=

ஏ.ஆர். ரஹ்மான் இந்தியாவில் ஒரு பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். கடந்த 30 ஆண்டுகளாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறது. இந்திய திரைப்பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார் ரகுமான். இந்தியாவில் பல விருதுகள் உட்பட இரண்டு ஆஸ்கார் விருதும் வென்றுள்ளார். ஏஆர் ரஹ்மான் மார்ச் 12, 1995 அன்று சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ரஹீமா, கதீஜா, அமீன் என்ற இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருடங்கள் திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிவதாக முடிவு செய்துள்ளனர். 

மேலும் படிக்க | விஜய்யுடன் எடுத்த பிரைவேட் புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா! “ஒரு வேள இருக்குமோ..”

இந்த தகவலை இந்த வாரம் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். ரஹ்மானும், சாய்ரா பானுவும் விவாகரத்து செய்யப் போவதாக கூறிய மறுநாள், ஏ.ஆர். ரஹ்மானின் இசைக்குழுவில் பேஸ் கிட்டார் வாசிக்கும் மோனிகா டி, தனது கணவரை பிரிவதாக அறிவித்தார். இந்நிலையில் ரஹ்மான் மற்றும் சாய்ரா பானுவின் விவாகரத்து குறித்தும் பலர் தங்களது சொந்த கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர். இதற்கு ரகுமானின் குழந்தைகள் ரஹிமா ரஹ்மான் மற்றும் அமீன் ரஹ்மான் இருவரும் மறுப்பு தெரிவித்து இருந்தனர். 

ஏ.ஆர் ரகுமான் வக்கீல் நோட்டீஸ்

கடந்த சில நாட்களாக ஏ.ஆர் ரகுமான் மீது தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் தனது விவாகரத்து குறித்து தவறான தகவலை பகிர்ந்துள்ள அனைவரும் உடனடியாக அதனை நீக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். "ரகுமான் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களும் கட்டுரைகளும் வீடியோக்களும் வெளியிட்ட சமூக வலைதளங்கள், யூடியூப் சேனல்கள் மற்றும் வலைதள நிறுவனங்கள் உடனடியாக அவற்றை நீக்க வேண்டும்" என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சார்பில் அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வழக்கறிஞர் நோட்டீஸில் "சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் வகையில் உண்மைக்கு மாறான தகவல்கள் எழுதப்பட்டிருக்கிறது. சில கட்டுரைகள் கற்பனைகள் புனைந்து ஏ.ஆர்.ரகுமான் பேட்டி கொடுத்தது போன்று அவதூறு வீடியோக்களையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும், சமூகத்தின் ஏஆர்.ரஹ்மானுக்கு அவரது மனைவிக்கும் இடையே உறவுகள் குறித்தும் தேவையில்லாத கற்பனை கதைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இது போன்ற விஷயங்கள் ஏ.ஆர்.ரகுமானை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாகவும்" அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த அவதூறு கட்டுரைகளையும் வீடியோக்களையும் உடனடியாக நீக்காவிட்டால் உரிய சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | த்ரிஷாவிற்கு விரைவில் திருமணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News