சென்னை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளொன்றுக்கு 20 லட்சம் தடுப்பூசிகள் என்ற இலக்கை எட்ட வேண்டும் என தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 10,000 தடுப்பூசி முகாம்களை அமைக்கவும், ஒரு நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமையன்று (2021, செப்டம்பர் 05)தெரிவித்தார்.
தமிழகத்தில் 20 லட்சம் தடுப்பூசிகளை நாளொன்றுக்கு போட வேண்டும் என்றால், அது தற்போது போடப்படும் தடுப்பூசி எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
எனவே, தமிழகத்தில் எதிர்வரும் நாட்களில் 10,000 முகாம்கள் அமைக்கப்படும் என்றும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக சுகாதார அமைச்சரும், மூத்த அதிகாரிகளும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட கேரளாவின் எல்லையோர மாவட்டங்களுக்குச் சென்று தடுப்பூசி முகாம்களை நடத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள்.
கேரளாவிலிருந்து வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடைபயணமாக வருபவர்கள் உட்பட அனைவருக்கும் மாநில எல்லையில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்டிருக்கவேண்டும். அல்லது கோவிட் நெகட்டிவ் என்று சான்றளிக்கும் ஆர்டி-பிசிஆர் சோதனை அறிக்கைகளை கொடுக்கவேண்டும். அப்படியிருப்பவர்காள் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
கோவிட் நோய் தொடர்பாக தமிழக அரசு கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. அனைத்து போக்குவரத்து முறைகளும் கண்காணிக்கப்படுகின்றன. கோவிட் பரிசோதனி செய்து, அதற்கான முடிவை 13 நிமிடங்களில் வழங்கும் ஆய்வு மற்றும் வெப்ப பரிசோதனை வசதிகள் மாநிலம் முழுவதும் பரவலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோவிட் பரவலைத் தடுக்க ஒரே வழி 100 சதவீதம் தடுப்பூசி போடுவதை உறுதி செய்வது என்பதாகும். அதேபோல், எல்லை மாவட்டங்களில் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றும் அமைச்சர தெரிவித்தார்.
தற்போது 34 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழக அரசிடம் கையிருப்பு உள்ளது. அதோடு, நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று (2021, செப்டம்பர் 06) 19.22 லட்சம் கோவிஷீல்ட் டோஸ்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இதுதான் ஒரு நாளில் அதிகபட்சமாக பெறப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் ஆகும்.
ALSO READ | மக்களே உஷார்! கொரோனைவை தொடர்ந்து பரவுகிறது அடுத்த வைரஸ்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR