பல வருட உழைப்பின் விளைவாக ராவ் ஒரு வழக்கறிஞராக ஆனார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் பயிற்சி பெறுவதற்கான உரிமத்தைப் பெற்று கராச்சி பார் அசோசியேஷனில் உறுப்பினரானார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதில் நடவடிக்கை 360 டிகிரியில் நடந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Defence Minister Rajnath Singh)) தெரிவித்தார்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஏற்பட்ட காயங்களை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
12 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நவம்பர் மாதத்தில் மும்பையில் நடந்த அந்த தாக்குதல் நாட்டிற்கு துக்கம், அதிர்ச்சி, கோபம், திகில், அச்சம் என அனைத்து உணர்வுகளையும் ஒன்றாக அளித்தது.
பாகிஸ்தான், இரான், சிரியா, சோமாலியா உள்ளிட்ட 13 இஸ்லாமிய நாடுகளின் குடிமக்களுக்கு புதிய விசாக்களை வழங்குவதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுத்தியுள்ளதாக அரசுக்கு சொந்தமான business park வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாவல் படை, ஜம்மு காஷ்மீரின் சம்பாவில் பாகிஸ்தான் எல்லையில் சுரங்கப்பாதையை கண்டறிந்துள்ளது. மேலும் சுரங்கப்பாதை உள்ளதா என கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1300 ஆண்டுகள் பழமையான விஷ்ணுவின் கோயிலை ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள பாரிகோட் குண்டாயி என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடித்துள்ளனர்.
உரிம மோசடி காரணமாக, கொடி கேரியர் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவிலும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதை அடுத்து, பயங்கரவாதத்திற்கு நிதி உதவியை, நேரடியாக அல்லது மறைமுமாக அளிப்பது குறித்த விஷயம் தீவிரமாகி வருகிறது.
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் பாகிஸ்தான் பல சிக்கல்களில் சிக்கிக்கொண்டது. ஜோ பிடனின் வெற்றி அவர்களது பல சிக்கல்களை சரி செய்யும் என்ற நம்பிகையுடன் பாகிஸ்தான் காத்திருகிறது.
கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா தொடர்பான பாகிஸ்தானின் புதிய சதி அமபல்மாகியுள்ளது. கர்தார்பூர் குருத்வாரா கட்டுப்பட்டை ISI வசம் ஒப்படைத்து பாகிஸ்தான் மீண்டும் ஒரு புதிய சதி வேலையில் இறங்கியுள்ளது
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பற்றிய அதிர்ச்சியூட்டும் கூற்று ஒன்றில், பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாஸ், 1987 ஆம் ஆண்டில் இம்ரான் போதைப்பொருள் உட்கொண்டதைக் கண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.