‘ஜோ அதிபரானால் ஜாலிதான்’- மகிழிச்சியில் மிதக்கும் பாகிஸ்தான், காரணம் இதுதான்….

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் பாகிஸ்தான் பல சிக்கல்களில் சிக்கிக்கொண்டது. ஜோ பிடனின் வெற்றி அவர்களது பல சிக்கல்களை சரி செய்யும் என்ற நம்பிகையுடன் பாகிஸ்தான் காத்திருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 6, 2020, 12:02 PM IST
  • ஜோ பிடன் எப்போதுமே பாகிஸ்தான் பக்கம் ஆதரவான சாய்வு கொண்டவர்.
  • 2008 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் பிடனுக்கு இரண்டாவது மிக உயர்ந்த சிவில் கௌரவ விருதான 'ஹிலால்-இ-பாகிஸ்தான்' –ஐ வழங்கியது.
  • ஜோ பிடன் அதிபர் ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பழைய தூதாண்மை உறவுகள் மீண்டும் மலரும்
‘ஜோ அதிபரானால் ஜாலிதான்’- மகிழிச்சியில் மிதக்கும் பாகிஸ்தான், காரணம் இதுதான்…. title=

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளிவர உலகமே காத்திருக்கிறது. இந்த நிலையில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் (Joe Biden) அதிபராக வெண்டும் என ஆவலாகக் காத்திருக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. பாகிஸ்தானுக்கென்ன பிடனின் மீது அவ்வளவு அக்கறை என கேட்டால், இதற்கு பல காரணங்கள் உள்ளன.

டொனால்ட் டிரம்ப் (Donald Trump) நிர்வாகத்தில் பாகிஸ்தான் பல சிக்கல்களில் சிக்கிக்கொண்டது. ஜோ பிடனின் வெற்றி அவர்களது பல சிக்கல்களை சரி செய்யும் என்ற நம்பிகையுடன் பாகிஸ்தான் காத்திருகிறது.

ஜோ பிடன் எப்போதுமே பாகிஸ்தான் பக்கம் ஆதரவான சாய்வு கொண்டவர். அவர் பாகிஸ்தானுடன் நல்லுறவைக் கொண்டிருந்தார். இப்படி பல விஷயங்கள் காரணமாகத்தான் பாகிஸ்தான் அவருக்காக பிரார்த்திக்கின்றது.

2008 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் பிடனுக்கு இரண்டாவது மிக உயர்ந்த சிவில் கௌரவ விருதான 'ஹிலால்-இ-பாகிஸ்தான்' –ஐ வழங்கியது. ஜோ பிடென் மற்றும் செனட்டர் ரிச்சர்ட் லுகர் ஆகியோர், பாகிஸ்தானுக்கு, ராணுவ உதவியைத் தவிர 1.5 பில்லியன் டாலர் நிதி உதவியை அளிக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தனர். லுகருக்கும் 'ஹிலால்-இ-பாகிஸ்தான்' கௌரவம் வழங்கப்பட்டது.

அப்போதைய பாகிஸ்தான் அதிபராக இருந்த ஆசிப் அலி சர்தாரி இருவருக்கும் "தொடர்ந்து பாகிஸ்தானை ஆதரித்ததற்காக" நன்றி தெரிவித்திருந்தார்.

தற்போது ஜோ பிடன் அதிபர் ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான பழைய தூதாண்மை உறவுகள் மீண்டும் மலரும் என்று பாகிஸ்தான் (Pakistan) ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

டிரம்ப்பின் நேரடியான முன்னோக்கு அணுகுமுறை மற்றும் வழக்கமான தூதாண்மை அணுகுமுறையை மெற்கொள்ளாத நிலைப்பாடு ஆகியவற்றால் பாகிஸ்தானுக்கு அவரை பிடிக்காமல் போனது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல பொது மன்றங்களில் பாகிஸ்தானை பலமுறை கண்டித்துள்ளார்.

டிரம்பின் ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவுக்கும் (America) பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.

ALSO READ: US Elections: வெற்றியை நோக்கி Biden, ஒப்புக்கொள்ள மறுக்கும் Trump, காத்திருக்கும் US!!

மற்றொரு பாகிஸ்தான் ஆய்வாளர், டிரம்ப் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் பாகஸ்தான் விஷயத்தில் இன்னும் உறுதியுடன் பல நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என கூறினார். முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் குடிமக்கள் தொடர்பாக டிரம்ப் ஏற்கனவே பல சட்டங்களை இயற்றியுள்ளார். எனவே, டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே பாகிஸ்தானின் ஒரே விருப்பமாக உள்ளது.

மேலும், ஜோ பிடென் தனி காஷ்மீர் கேட்கும் மக்களுக்கு ஆதரவான் நிலைப்பாட்டைக் கொண்டவர். அவர், காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களின் அவல நிலையை பங்களாதேஷில் ரோஹிங்கியாக்கள் மற்றும் சீனாவில் உள்ள யுகர் முஸ்லிம்களுடன் ஒப்பிட்டார்.

அரசியலமைப்பின் 370 வது பிரிவை இந்தியா ரத்து செய்த சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு, ஜூன் 2020 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், காஷ்மீரிகளின் உரிமைகளை மீட்டெடுக்குமாறு பிடென் புதுதில்லியை கேட்டுக் கொண்டார்.

"காஷ்மீரில், காஷ்மீர் மக்கள் அனைவரின் உரிமைகளையும் மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்க வேண்டும். அமைதியான போராட்டங்களைத் தடுப்பது அல்லது இணையத்தை மூடுவது போன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும்” என்று அவர் வெளிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையை தீவிரமாக கவனித்து வரும் வல்லுநர்கள், ஜோ பிடன் வெள்ளை மாளிகையில் பதவியேற்றால் அது பாகிஸ்தானுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஜோ பிடென் தனது வெளியுறவுக் கொள்கையில் பாகிஸ்தானுடனான உறவுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், பிடனின் ஆட்சிக் காலத்தில், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் இப்போதிருப்பதை விட சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதனால் இந்தியா (India) அமெரிக்க இடையிலான உறவுகளில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

ALSO READ: US Elections: டிரம்ப்புக்கு வெற்றியா அல்லது ஜோ ஜெயிப்பாரா? பரபரப்பு தொடர்கிறது…..

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News