எல்லை பாதுகாப்பு படை (BSF) துருப்புக்கள் ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் நிலத்தடி சுரங்கப்பாதையை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரோந்து பணியின் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாவல் படையினர் (BSF) நிலத்தடி சுரங்கப்பாதை யை கண்டறிந்தனர் என்றும், பயங்கரவாதிகள் எல்லையைத் தாண்டி ஊடுருவ இதனை பயன்படுத்தியிருக்கலாம் என்றும் பாதுகாவல் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வியாழக்கிழமை இராணுவ நடவடிக்கையில், நர்கோட்டா எண்கவுண்டரில் கொல்லப்பட்ட நான்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி, பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எல்லை பாதுகாவல் படை அதிகாரிகள் மேலும் கூறுகையில், வெள்ளிக்கிழமை முதல் மிகப்பெரிய அளவில் சுரங்கப்பாதை களை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இராணுவம் மற்றும் காவல்துறையினரும் இந்த நடவடிக்கையில் இணைந்துள்ளனர் என்றார். நடவடிக்கை இன்னும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக, சம்பா செக்டாரில் சர்வதேச எல்லையைத் தாண்டி நான்கு பயங்கரவாதிகள் ஊடுருவியது குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதை அடுத்து, எல்லை பாதுகாவல் படை எடுத்த நடவடிக்கை காரணமாக ஜம்மு-காஷ்மீரில் நக்ரோட்டா அருகே வியாழக்கிழமை காலை நான்கு பயங்கரவாதிகள், எண்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த, அவர்களின் தலைவர் மவுலானா மசூத் அசாரின் சகோதரர் முப்தி ரவூப் அஸ்கரின் உத்தரவை ஏற்றுக் கொண்டு நிறைவேற்ற வந்திருந்தனர்.
அதிர்ஷ்டவசமாக, அவரது சதித்திட்டத்தை நாட்டின் உளவுத் துறை, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.
நான்கு பயங்கரவாதிகளும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் சம்பா செக்டாரிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தார்கள்
ALSO READ | Nagrota encounter: மசூத் அஸார் சகோதரர் உத்தரவை நிறைவேற்ற வந்த பயங்கரவாதிகள்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR