‘இம்ரான் கான் ஒரு drug addict ஆக இருந்தார்’: முன்னாள் கிரிக்கெட் வீரர் அளித்த திடுக்கிடும் தகவல்!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பற்றிய அதிர்ச்சியூட்டும் கூற்று ஒன்றில், பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாஸ், 1987 ஆம் ஆண்டில் இம்ரான் போதைப்பொருள் உட்கொண்டதைக் கண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 3, 2020, 02:56 PM IST
  • இம்ரான் கான் கோகோயின் உட்கொள்வதை பார்த்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவாஸ் கூறினார்.
  • நவாஸ் பேசிய விடியோ வைரல் ஆனது.
  • 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களிலும் நவாஸ் மற்றும் இம்ரான் ஆகியோர் பாகிஸ்தானின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களாக இருந்தனர்.
‘இம்ரான் கான் ஒரு drug addict ஆக இருந்தார்’: முன்னாள் கிரிக்கெட் வீரர் அளித்த திடுக்கிடும் தகவல்!! title=

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பற்றிய அதிர்ச்சியூட்டும் கூற்று ஒன்றில், பாகிஸ்தானின் (Pakistan) முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாஸ், 1987 ஆம் ஆண்டில் இம்ரான் போதைப்பொருள் உட்கொண்டதைக் கண்டுள்ளதாகக் கூறியுள்ளார். கான் கோகோயின் உட்கொள்வதையும் பார்த்ததாக நவாஸ் கூறினார்.

1970 களின் பிற்பகுதியிலும் 1980 களிலும் நவாஸ் மற்றும் இம்ரான் ஆகியோர் பாகிஸ்தானின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்ட ஒரு வீடியோவில், சர்பராஸ் இதைக் கூறுவதைக் காண முடிகிறது.

இம்ரான் கான் (Imran Khan) போதைப்பொருளை உட்கொண்டதை தான் மட்டும் காணவில்லை என்று, அதைப் பார்த்தவர்கள் பலர் உள்ளனர் என்றும், தான் கூறிய கூற்றுக்கள் தவறானவை என்றால், தன்னை இம்ரான் கான் நீதிமன்றத்தில் நிறுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ALSO READ: US Elections: வன்முறை வெடிக்கும் அச்சத்தில் சொத்துகளை பாதுகாக்கும் முயற்சியில் அமெரிக்கா!!

1987 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்த சர்ஃபராஸ், பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் (England) இடையிலான போட்டியின் போது இம்ரான் சரியாக செயல்படாதபோது இஸ்லாமாபாத்தில் வீட்டிற்கு வந்து போதைப்பொருளை உட்கொண்டதாக கூறினார்.

"அவரும் இவற்றை எடுத்துக்கொள்வார். அவர் (இம்ரான் கான்) கஞ்சாவை உட்கொண்டிருக்கிறார். அவர் லண்டனிலும் என் வீட்டிலும் கூட அதைச் செய்துள்ளார். 1987 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் ஒரு கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டபோது, ​​அவர் நன்றாக பந்து வீசவில்லை. அவர் இஸ்லாமாபாத்தில் மொஹ்சின் கான், அப்துல் காதிர், சலீம் மாலிக் ஆகியோருடன் உணவுக்காக என் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவர் சரஸையும் உட்கொண்டார். அவர் இப்படி போதைப்பொருட்களை உட்கொள்வது உண்டு.  கோகோயினும் சாப்பிடுவார். லண்டனில் இப்படி பலமுறை செய்துள்ளார்” என்று நவாஸ் காணொளியில் கூறியுள்ளார்.

"அவரை என் முன் அழைத்து வாருங்கள். அவர் அதை மறுக்கிறாரா என்று பார்ப்போம். இதைக் கண்ட சாட்சி நான் மட்டும் அல்ல.  இதைக் கண்டவர்கள் லண்டனில் பலர் உள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.

ALSO READ: Vienna-வில் பயங்கரவாத தாக்குதல்: ஒருவர் இறந்தார், பலர் காயமடைந்தனர்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News