இந்தியா மற்றொரு பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது..!!

பாகிஸ்தான்-சீனாவுடன் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் சூப்பர்சோனிக் ஏவுகணை பிரம்மோஸின் மற்றொரு  பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 24, 2020, 03:58 PM IST
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலிருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையை இந்தியா இன்று பரிசோதனை செய்ததாக செய்தி நிறுவனம் ட்வீட் செய்தது.
  • பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பு 400 கி.மீ.
  • சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை பிரம்மோஸின் பல நேரடி சோதனைகளை இந்த வாரம் இந்தியா நடத்தும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா மற்றொரு பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது..!! title=

பாகிஸ்தான்-சீனாவுடன் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் சூப்பர்சோனிக் ஏவுகணை பிரம்மோஸின் மற்றொரு  பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது

இந்தியா இன்று தனது, நிலபரப்பிலிருந்து நிலப்பரப்பை தாக்க வல்ல சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை பிரம்மோஸ் (Brahmos) ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்து செவ்வாய்க்கிழமை, இந்த கப்பல் ஏவுகணையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதனை செய்ததாக ஆதாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தி நிறுவனம் இந்த தகவலை ட்விட்டரில் (Twitter) வெளியிட்டது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலிருந்து பிரம்மோஸ் (Brahmos) சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையை இந்தியா இன்று பரிசோதனை செய்ததாக செய்தி நிறுவனம் ட்வீட் செய்தது. 

இந்த சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை காலை பத்து மணிக்கு சோதனை செய்யப்பட்டு ஏவுகணை அதன் இலக்கை வெற்றிகரமாக தாக்கியது என்று ட்வீட் மேலும் தெரிவித்தது. இந்த சோதனையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. டிஆர்டிஓ (DRDO) உருவாக்கிய ஏவுகணை அமைப்பு இந்திய ராணுவத்தின் பல படைப்பிரிவுகளிடம் உள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பு 400 கி.மீ. சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை பிரம்மோஸின் பல நேரடி சோதனைகளை இந்த வாரம் இந்தியா நடத்தும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News