ஐநாவில் சீர்த்திருத்தம் ஏற்பட வேண்டும்: SCO மாநாட்டில் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் ஐ.நாவிடம் வலியுறுத்தினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2020, 08:41 PM IST
  • SCO மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
  • உரையின் போது பயங்கரவாத பிரச்சினைகள் எழுப்பப்பட்டன
  • நாடுகள் பரஸ்பரம் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிக்க வேண்டும் என பிரதமர் கூறினார்
ஐநாவில் சீர்த்திருத்தம் ஏற்பட வேண்டும்: SCO மாநாட்டில் பிரதமர் மோடி title=

பிரதமர் நரேந்திர மோடி, சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் ஐ.நாவிடம் வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) செவ்வாய்க்கிழமை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு  (SCO) மாநாட்டில் உரையாற்றிய போது, அனைத்து உறுப்பு நாடுகளுடனான தொடர்பு மேலும் வலுப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.

'ஐக்கிய நாடுகள் சபை (UN) 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது, ஆனால் பல வெற்றிகளைப் பெற்ற பிறகும், ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய நோக்கம் இன்னும் முழுமையடையவில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்கள் தேவை. மாற்றம் மட்டுமே நிலையான விஷயம் என்றார்.

கோவிட் காலத்தில் 150 நாடுகளுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியது என்றூம், கோவிட்டின் நெருக்கடியின் போது, ​​எச்.சி.கியூ மற்றும் பாராசிட்டமால் போன்ற கோவிட் எதிர்ப்பு மருந்துகளை நூற்று ஐம்பது நாடுகளுக்கு இந்தியா  வழங்கியது என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும் படிக்க | காஷ்மீரில் மட்டும் மலரும் குங்குமப்பூ இனி வட கிழக்கு இந்தியாவிலும் பூக்கும்...!!!!

சீனாவை பெயரிடாமல் மறைமுகமாக குறிப்பிட்ட, பிரதமர் நரேந்திர மோடி, தனது உரையில், சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து காரிடார், சபாஹர் துறைமுகம், அஷ்கபாத் ஒப்பந்தம், இவை அனைத்தும் போக்குவரத்து துறையில் மேம்ப்பாடு ஏற்படுத்துவது தொடர்பான இந்தியாவின் உறுதிபாட்டை பிரதிபலிக்கின்றன என்றார். போக்குவத்தை மேம்ப்படுத்தும் அதே நேரத்தில், நாடுகள் பரஸ்பரம் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிப்பது அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும் என்றார்

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு மோசமடைந்து வரும் நிலையில், கல்வான் மோதலுக்கு பிறகு, இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபரும் இருவரும் ஒரே மேடையில் வருவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கத்து இருப்பினும் இந்த மாநாட்டு மெய்நிகர் முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கல்வான் பள்ளத்தாக்கில், சீன துருப்புக்களின் வன்முறை நடவடிக்கைகளால் ஜூன் மாதத்தில்  இந்தியா தனது 20 வீரர்களை இழந்தது.

பாகிஸ்தான் (Pakistan) குறித்து பிரதமர் மோடி கூறுகையில், 'எஸ்சிஓ மாநாட்டின் போது தேவையற்ற முறையில் இருதரப்பு பிரச்சினைகளை கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறுவதாகும் என்றார்.

எஸ்சிஓ மெய்நிகர் உச்சி மாநாட்டில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில், உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நடத்திய கூட்டத்தில், பாகிஸ்தான் இந்தியாவின் ஒருமைப்பட்டிற்கு எதிரான வகையில் செய்லபட்டதை கடுமையாக கண்டனம் செய்தார்.

இப்போது நவம்பர் 30 அன்று, எஸ்சிஓ தலைவர்களின் அரசாங்க மெய்நிகர் கூட்டத்தை இந்தியா ஏற்பாடு செய்யும். இது பொருளாதார ஒத்துழைப்பை மையமாக கொண்ட கூட்டம் ஆகும்.

மேலும் படிக்க | ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தடை செய்ய கோரிய வழக்கை நிராகரித்து NGT..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News