ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த கர்நாடக இளைஞர்கள் வருங்காலத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஏதுவாக, ரோபாடிக்ஸ் படித்து வந்ததாக என்ஐஏ அதன் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது
சிரியாவில் உள்ள குர்திஷ் அகதிகள் முகாம்களில் (Kurdish refugee camps) இருந்து மேற்கத்திய ஜிஹாதி மணப்பெண்களை மீட்பது (Western jihadi brides) என்ற பெயரில் ஒரு இஸ்லாமிய அமைப்பு சந்தேகத்திற்குரிய வகையில் நிதி திரட்டியதாக இங்கிலாந்து வலைத்தளம் டெய்லி மெயில் (UK website Daily Mail) செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் லெவண்ட் - கோரசன் மாகாணத்தைச் சேர்ந்த இருவரை தேசிய தலைநகரின் ஓக்லா பகுதியில் இருந்து கைது செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள இராணுவ அகாடமியை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் மற்றும் நான்கு ராணுவ வீரர்கள் உட்பட குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான இந்தியர்கள், கட்டுமான பணிக்காக ஈராக் சென்றனர். பின்னர் அங்கு IS பயங்கரவாதிகள் ஆதிக்கம் தலைதூக்கிய போது, மொசூல் என்னும் நகரில் இருந்த 39 இந்தியர்கள் மாயமாகினர்.
கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் மொசூல் நகரில் வேலை செய்து வந்த 39 இந்தியர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஈராக் வெளியுறவு அமைச்சர் இப்ராஹிம் அல் ஜாபாரி, 5 நாள்(ஜூலை 24-28) அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். அவரிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது.
ஐஎஸ் தீவிரவாத ஆதரவாளர் சென்னையில் ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
சென்னை மண்ணடியில் செல்போன் கடை வைத்திருக்கும ஹாரூன், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு நிதி அனுப்பியதாக வந்த புகாரின் அடிப்படையில் ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இன்று அதிகாலை அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் மயிலாப்பூரைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டி அனுப்பியதாக வந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தற்போது ராஜஸ்தான் சிறையில் உள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலை தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஷியா மக்கள் வழிபடும் மசூதியில் நேற்று நடைபெற்ற தொழுகையின் போது, திடீரென தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து காபூல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
சிரியாவின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஹமா மாகாணத்தில் அமைந்திருக்கும் 2 கிராமங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் திடீரென்று
கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட 52 பேர் கொல்லப்பட்டனர்.தாக்குதல் நடத்த பட்ட இரண்டு கிராமங்களிலும் 15 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகளும் இறந்துள்ளனர். மேலும் 27 அரசு ஆதரவு படை வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
இதில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பை சேர்ந்த 10 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
பாரிஸில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சாம்ப்ஸ் எலிஸில் பகுதியில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் போலீஸ் அதிகாரிகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சகம் இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை.ஆனால், இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளான தயே பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் பார்லிமென்ட் அட்டாக் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு
பிரிட்டன் பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் பார்லிமென்ட் வாளகம், வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே நேற்று மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியானதாகவும் 40 பேர் காயமடைந்ததாகவும், அதில் 29 பேர் மருத்துவமானையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் 2 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்னர்.
குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருடன் தொடர்புடையதாக சந்தேகத்தின்படி, இருவரை தீவிரவாத ஒழிப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், நாட்டில் தீவிரவாத சம்பவங்களை நிகழ்த்த குஜராத்தில் உள்ள வெடிப்பொருள் ஃபேக்டரியில் இருந்து ரசாயன வெடிப்பொருட்களை வாங்க திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.