பிரிட்டன் துப்பாக்கிச்சூடு: ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு

Last Updated : Mar 23, 2017, 07:56 PM IST
பிரிட்டன் துப்பாக்கிச்சூடு: ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு title=

பிரிட்டன் பார்லிமென்ட் அட்டாக்  ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு

பிரிட்டன் பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் பார்லிமென்ட் வாளகம், வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே நேற்று மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியானதாகவும் 40 பேர் காயமடைந்ததாகவும், அதில் 29 பேர் மருத்துவமானையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் தொடர்பாக 8 பேரை கைது செய்து இங்கிலாந்து காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  

Trending News