புது தில்லி: ஈஸ்டர் பண்டிகை அன்று கொழும்பு நகரில் மூன்று தேவாலயங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடப்பட்டன. அதில் இதுவரை 310 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான இஸ்லாமிய எஸ்டேட் (IS) பொறுப்பேற்றுள்ளது என அமக் செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
செய்தி நிறுவனமான அமக் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, பயங்கரவாதக் குழுவான இஸ்லாமிய எஸ்டேட் தாக்குதலை நிகழ்த்தியதாக கூறியுள்ளது. இந்த்ச தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதுடன், 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் வெளிநாட்டை சேர்ந்தவர்களில் 10 இந்தியர்கள் ஆவார்கள். அதே நேரத்தில், இலங்கை அரசாங்கம் தாக்குதலுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு தேசிய Tawheed Jamaat (தவ்ஹீத் ஜமாத்) அமைப்பே என குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதல் சம்பந்தமாக இதுவரை 24 பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் அவசர நிலை பிரகடனம் மற்றும் தேசிய துக்க நாள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து கொழும்பு நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.