Uttar Pradesh business loan | தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்க பட்டதாரிகள், பெண்கள், கைம்பெண்கள், சிறுகுறு தொழில் துறையினர் எல்லோரும் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இதுதவிர மகளிர் உதவித் குழு கடன், விவசாய கடன், கூட்டுறவு சங்க கடன், குடிசை தொழிலுக்கு கடன் என ஒவ்வொரு தொழிலுக்கும் அரசு திட்டங்கள் வழியாக வங்கிகள் மூலம் கடன் பெறலாம். இதனைப் பின்பற்றி உத்தரப்பிரதேச மாநில அரசும் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வடக்கு நண்பர்கள் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். அதுவும் வட்டி இல்லாமல் கடன் பெற முடியும். அந்த திட்டம் என்ன?, கடன் பெறுவது எப்படி? என்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.
உத்தரப்பிரதேச மாநில அரசு முக்கிய மந்திரி யுவ உத்யமி விகாஸ் அபியான் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. தொழில் தொடங்குபவர்களுக்கு கடன் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பயனடைய முடியும். ரூ.5 லட்சம் வரை கடனாக பெறும் முக்கிய மந்திரி யுவ உத்யமி விகாஸ் அபியான் திட்டத்தில் பயனாளிகள் வட்டியாக ஒரு பைசா கூட செலுத்த தேவையில்லை.
உத்தரப்பிரதேச அரசின் புதிய திட்டம் என்ன?
உத்தரபிரதேச அரசின் MSME துறை இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் முக்கிய மந்திரி யுவ உத்யமி விகாஸ் அபியான். அம்மாநில இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் புதிய தொழில்களை தொடங்கலாம். 5 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்கப்படும். வட்டி கட்ட தேவையில்லை. இந்தத் திட்டத்திற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் பொருளாதார நிபுணர்கள் குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது. இந்தக் குழுவில் பட்டயக் கணக்காளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளனர். ஜனவரி 24 முதல் தொடங்கப்பட்டுள்ள முக்கிய மந்திரி யுவ உத்யமி விகாஸ் அபியான் திட்டத்தில் வடக்கு நண்பர்கள் தொழிலதிபராக வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
முக்கிய மந்திரி யுவ உத்யமி விகாஸ் அபியானுக்கு விண்ணப்பிக்க, உத்தரபிரதேச அரசின் MSME இணையதளமான https://msme.up.gov.in-செல்ல வேண்டும். ஒருவேளை நீங்கள் எந்த தொழிலைத் தொடங்குவதில் எந்த ஐடியாவும் இல்லாமல் குழப்பமாக இருந்தால் இதற்கும் அம்மாநில அரசின் குழுவினரே உதவி செய்வார்கள். இந்த இணையதளத்தில் உங்களுக்கு 400 திட்ட அறிக்கைகள் மற்றும் 600 வணிக யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில் செய்ய விரும்புபவர்கள் அதனை பார்த்து, நீங்கள் உங்கள் தொழிலைத் தொடங்கலாம்.
ரூ.10 லட்சம் கடன் யாருக்கு கிடைக்கும்?
இந்தத் திட்டத்தின் கீழ், கடன் பெற குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் 4 ஆண்டுகளுக்குள் ரூ.5 லட்சம் கடனை முறையாக திருப்பிச் செலுத்தும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும், அதில் 50% வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
மேலும் படிக்க | அரசு ஓய்வூதியதாரர்களுக்கான பென்ஷன் தேதி குறித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ