பயனர்களுக்கு முக்கிய செய்தி.... கட்டணத்தை குறைத்த ரிலையன்ஸ் ஜியோ - ஏர்டெல் நிறுவனங்கள்

ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற பெரிய நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் பழைய திட்டங்களின் விலையையும் குறைத்துள்ளன.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 27, 2025, 02:45 PM IST
  • ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கடந்த ஜூலையில், தனது ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை அதிகரித்தது
  • தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை குறைத்து வருகின்றன.
  • ஜியோ தனது ரீசார்ஜ் திட்டம் ஒன்றின் கட்டணத்தை ரூ.210 என்ற அளவில் குறைந்துள்ளது.
பயனர்களுக்கு முக்கிய செய்தி....  கட்டணத்தை குறைத்த ரிலையன்ஸ் ஜியோ - ஏர்டெல் நிறுவனங்கள் title=

இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் இப்போது தொலைபேசி அழைப்புகள் மற்றும் எஸ் எம் எஸ் வசதிக்கான மலிவான திட்டங்களை வழங்குகின்றன. ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற பெரிய நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் பழைய திட்டங்களின் விலையையும் குறைத்துள்ளன.

மக்கள் மலிவான திட்டங்களை விரும்புவதாலும், அரசு அமைப்பான TRAI, தொலைத் தொடர்பு நிறுவனங்களை திட்டங்களை தொடர்ந்து கண்காணிப்பதாலும், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை குறைத்து வருகின்றன. ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தனது ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை அதிகரித்தது நினைவிருக்கலாம். இந்நிலையில், ஜியோ  மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தனது ரீசார்ஜ் திட்டம் ஒன்றின் கட்டணத்தை குறைந்துள்ளது. இந்தத் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்...

ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்

ஜியோவின் ரூ.1748 திட்டம்

முன்னதாக ஜியோவின் இந்த திட்டம் ரூ.1958  என்ற கட்டணத்தில் இருந்தது, தற்போது இதன் கட்டணம்  ரூ.1748 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது நிறுவனம் திட்டத்தில் இருந்து ரூ.210 குறைத்துள்ளது. எனினும், வேலிடிட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 365 நாட்கள் செல்லுபடியாகும். இப்போது இது 336 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 3600 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. நீங்கள் ஜியோவின் JioTV, JioCinema மற்றும் JioCloud போன்ற செயலிகளை இலவசமாகப் பயன்படுத்தலாம். திட்டத்தின் தினசரி செலவு தோராயமாக ரூ.5.20 ஆகும்.

ஜியோவின் ரூ.448 திட்டம்

முன்னதாக இந்த திட்டம் ரூ.458  என்ற கட்டணத்தில் இருந்தது, தற்போது இதன் கட்டணத்தில் ரூ.448 ஆக உள்ளது. 84 நாட்கள்  வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் அன்லிமிடெட் தொலைபேசி அழைப்புகள் மற்றும் 1000 எஸ் எம் எஸ் செய்திகள் அனுப்பும் வசதியைப் பெறலாம். மேலும்,  JioTV, JioCinema மற்றும் JioCloud போன்ற ஜியோவின் செயலிகளை பயன்படுத்தலாம். இதற்கான தினசரி செலவு சுமார் 5 ரூபாய் மட்டுமே.

மேலும் படிக்க | Amazon Fab Fest Sale 2025: OnePlus 13 ஸ்மார்ட்போனை மிக மலிவான விலையில் வாங்க அற்புதமான வாய்ப்பு

ஏர்டெல் திட்டங்கள்

ஏர்டெல்லின் ரூ.1849 திட்டம்

முன்னதாக இந்த திட்டம் ரூ.1959 ஆக இருந்தது, தற்போது இதன் விலை ரூ.1849  என குறைந்து விட்டது. 365 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் தொலைபேசி அழைப்புகள் மற்றும் 3600 எஸ் எம் எஸ் செய்திகள். அதோடு, Apollo 24/7 Circle மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூனை உள்ளடக்கிய Airtel வெகுமதிகளை அனுபவிக்கலாம். இதற்கான தினசரி செலவு சுமார் ரூ.5.06 மட்டுமே.

ஏர்டெல்லின் ரூ.469 திட்டம்

முன்னதாக இந்த திட்டம் ரூ.499 ஆக இருந்தது, தற்போது இதன் விலை ரூ.469 ஆக உள்ளது. இதில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் தொலைபேசி அழைப்புகள் மற்றும் 900 எஸ் எம் எஸ் செய்திகள் அனுப்பும் வசதியை பெறலாம்.  அதோடு, Apollo 24/7 Circle உறுப்பினர் மற்றும் இலவச Hello tune உட்பட Airtel வெகுமதிகளை அனுபவிக்கவும்.
தற்கான தினசரி செலவு சுமார் ரூ 5.58 மட்டுமே.

மேலும் படிக்க | இனி ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் இத்தனை நாட்கள் சிம் ஆக்டிவாக இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News