SIP Mutual Fund: மாதம் ரூ.2000 போதும்... அதனை ரூ.2 கோடி ஆக்கும் ஃபார்முலா இது தான்..

SIP Mutual Fund Investment Tips in Tamil: கோடிகளில் பணத்தை சேர்க்க வேண்டுமானால், பெரிய முதலீடுகளைச் செய்வதன் மூலம் மட்டுமே அதனை சாதிக்க முடியும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் விரும்பினால், சிறிய அளவிலான சேமிப்பில் கூட கோடீஸ்வரராகலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 27, 2025, 06:01 PM IST
  • பரஸ்பர நிதிய முதலீட்டில் கிடைக்கும் ஆண்டு வருமானம்.
  • கோடிகளை அள்ளிக் கொடுக்கும் சூத்திரம்.
  • உங்களது 60 வயதில் ரூ.2 கோடிக்கு சொந்தக்காரர் ஆவீர்கள்.
SIP Mutual Fund: மாதம் ரூ.2000 போதும்... அதனை ரூ.2 கோடி ஆக்கும் ஃபார்முலா இது தான்.. title=

கோடிகளில் பணத்தை சேர்க்க வேண்டுமானால், பெரிய முதலீடுகளைச் செய்வதன் மூலம் மட்டுமே அதனை சாதிக்க முடியும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் விரும்பினால், சிறிய அளவிலான சேமிப்பில் கூட கோடீஸ்வரராகலாம். இதற்கு, பணவீக்கத்தை முறியடிக்கும் வருமானத்தைப் பெறக்கூடிய இடத்தில் சரியான நிதி மூலோபாயத்துடன் முதலீடு செய்ய வேண்டும். இது தவிர, நீங்கள் நீண்ட காலத்திற்கு பணத்தை தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் 2000 ரூபாயில் முதலீடு செய்யத் தொடங்கினால் கூட போதும். 2 கோடி ரூபாய் பணத்தை சேர்க்க உதவும் ஃபார்முலாவை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

அதிசயங்களைச் செய்யும் SIP ஃபார்முலா 

சிறிய சம்பளத்தில் கோடீஸ்வரர் ஆவதற்கான ஃபார்முலா 25/2/5/35. இதில் நீங்கள் நீண்ட கால முதலீட்டு உத்தியுடன் SIP மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த ஃபார்முலாவின் படி, நீங்கள் 25 வயது முதல் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். 2 என்றால் ரூ. 2,000 எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யத் தொடங்குங்கள். 5 என்பது ஒவ்வொரு வருடமும் 5 சதவிகிதம் தொகையை அதிகரிக்கவும், 35 என்றால் இந்த SIP 35 ஆண்டுகளுக்கு தொடர்ந்து தொடரவும்.

கோடிகளை அள்ளிக் கொடுக்கும் சூத்திரம் 

நீங்கள் 25 வயதில் ரூ.2,000  என்ற அளவில் SIP முதலீட்டை தொடங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இப்போது நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவிகிதம் என்ற அளவில் முதலீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ரூ.2,000 உடன் SIP ஐ ஆரம்பித்து, ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 முதலீடு செய்துள்ளீர்கள். அடுத்த ஆண்டு 2,000 ரூபாயில் 5 சதவீதம் அதாவது 100 ரூபாய் அதிகரிக்க வேண்டும். 

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்... ஏப்ரல் 1 முதல் ஓய்வூதியத்தில் மாற்றம்.. யார் யாருக்கெல்லாம் ஆதாயம்?

ஆண்டு முதலீட்டை 5% ன்ற அளவில் அதிகரித்தல்

அதாவது நீங்கள் இரண்டாவது ஆண்டில் மாதம் தோறும் ரூ.2,100  என்ற அளவில் SIP முதலீட்டை தொடர வேண்டும் . அடுத்த ஆண்டு, அதாவது மூன்றாம் ஆண்டில், ரூ.2,100ல் 5% அதாவது ரூ.105 என்ற அளவில் அதிகரித்து, ஆண்டு முழுவதும் எஸ்ஐபி முதலீட்டை மாதம் ரூ.2205 என்ற அளவில் தொடரவும். அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் ஏற்கனவே உள்ள தொகையில் 5 சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். இந்த முதலீடு 35 ஆண்டுகளுக்கு தொடரும்.

பரஸ்பர நிதிய முதலீட்டில் கிடைக்கும் ஆண்டு வருமானம்

முதலீட்டு ஃபார்முலாவின் படி, 35 வருடங்கள் முதலீட்டைத் தொடர்ந்தால், 35 ஆண்டுகளில் மொத்தம் ரூ.21,67,68 முதலீடு செய்வீர்கள். SIP முதலீட்டில் கிடைக்கும் ஆண்டு சராசரி வருமானம் 12 சதவீதமாக கொண்டால் கூட கோடிகளில் பணம் சேர்க்கலாம். ஆனால், பொதுவாக சில சிறந்த பரஸ்பர நிதியங்கள்,  30 சதவிகிதம் வரை கூட வருமானத்தை கொடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

 ரூ.2 கோடி கார்பஸ்

பரஸ்பர நிதிய முதலீட்டில், 12 சதவீத வருமானம் கிடைக்கும் என எடுத்துக் கொண்டால், முதலீட்டின் மீதான வட்டி மட்டுமே ரூ.1,77,71,532  என்ற அளவில் இருக்கும். இப்படி முதலீடு செய்த தொகையையும் வட்டித் தொகையையும் சேர்த்து மொத்தம் ரூ.1,99,39,220 (சுமார் ரூ.2 கோடி) கிடைக்கும். 35 வருடங்களில் உங்களுக்கு 60 வயதாகிவிடும். இந்த வயதில் நீங்கள் ரூ.2 கோடிக்கு சொந்தக்காரர் ஆவீர்கள்.

குறிப்பு: எந்தவொரு மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்வதற்கு முன் எப்போதும் நிதி ஆலோசகரை அணுகி, சிறந்த பரஸ்பர நிதியத்தை தேர்ந்தெடுப்பது அவசியம்.  மேலும், முதலீடு உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | NPS vs UPS | நாடு முழுவதும் பென்சன் முறையில் புதிய மாற்றம்... மத்திய அரசு திடீர் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News