ஐ.எஸ். தீவிரவாதிகள் டெலிகிராம் ஆப் வழியாக தகவல் பரிமாற்றம்?

பாகிஸ்தானில் போலீசாரிடம் சிக்காமல் தகவல் பரிமாற்றம் செய்ய ஐ.எஸ். தீவிரவாதிகள் 'டெலிகிராம்' எனும் ஆப் பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளது.

Last Updated : Mar 11, 2017, 10:03 AM IST
ஐ.எஸ். தீவிரவாதிகள் டெலிகிராம் ஆப் வழியாக தகவல் பரிமாற்றம்? title=

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலீசாரிடம் சிக்காமல் தகவல் பரிமாற்றம் செய்ய ஐ.எஸ். தீவிரவாதிகள் 'டெலிகிராம்' எனும் ஆப் பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த ஆப் மூலம் அவர்களுக்கு சாதகமான, ரகசிய தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடிவதாக கூறப்படுகிறது. 

குறுந்தகவல்கள் தானாக அழிந்து விடும் என்பதாலும் ஒருமுறை வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதும், அந்த தகவல் எவ்வித தடையமும் இன்றி தானாக அழிந்து விடும் என்பதாலும் இந்த ஆப் ஆனது தீவிரவாதச் செயல்களுக்கு மிகவும்  உதவிகரமாக இருப்பதாக பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

இந்த "டெலிகிராம்" ஆப்பை இடைமறிக்கும் தொழில்நுட்பமானது காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினரிடம் இல்லாதது பின்னடைவாக உள்ளது.

இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றம் செய்ய 'டெலிகிராம்' எனும் ஆப் பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளது.

Trending News