ஏமன் நாட்டு எல்லை அருகில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி அரேபியா இளவரசர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா இளவரசர்களுள் ஒருவரும், ஆசிர் மாகாண துணை கவர்னராகவும் பதவி வகித்தவர் மன்சூர் பின் மாக்ரோன். இவர் நேற்று அதிகாரிகள் சிலருடன் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்த பொழுது, ஏமன் நாட்டு எல்லை அருகில் திடீரென ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் சவுதி இளவரசர் மன்சூர் பின் உயிரிழந்தார் என அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள புருபாரசர் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இதில் ஒருவர் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எகிப்தின் கடலோர நகரமான அலெக்ஸாண்ட்ரியாவுக்கு அருகே இரண்டு ரயில்கள் மோதியதால், இதுவரை 44 பேர் பலியாகி உள்ளனர். 180 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தற்போது மீட்புப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் முழு வீச்சில் மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப் படுகின்றனர். இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், இரண்டு ரயில்களின் குப்பைகள் அகற்றப்பட்ட பிறகு இறப்பை குறித்து இறுதி எண்ணிக்கை அறிவிக்கப்படும் என எகிப்திய அமைச்சரவை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளன.
அரசுப் பஸ்சும் மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பலி
அரசு பஸ் மீது மணல் லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் கூறும்போது, மேட்டூரில் இருந்து தருமபுரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், சேலத்திலிருந்து தருமபுரி நோக்கிச் சென்று கொண்டிருந்த மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 6 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர் என கூறினார்கள்.
எகிப்து மத்திய தரைக்கடலில் கப்பல் கடலில் மூழ்கி 42 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சுமார் 600 பேர் கப்பலில் மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பா நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் எகிப்து நாட்டு கடல் எல்லையில் சென்றபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் மூழ்கியது இதனால் பலர் உயிருக்கு போராடினர்.
இது குறித்த தகவல் எகிப்து கடற்படையினருக்கு கிடைத்ததும் அவர்கள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று அடுத்தடுத்து 2 தாக்குதல் நடைபெற்றது.
தீவிரவாதிகள் முதலில் அவர்கள் கைபர் மலைவாழ் பகுதியில் உள்ள கிறிஸ்தவ காலனியில் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். அதில் ஒருவர் பலியானார். அடுத்த சில மணி நேரத்துக்குள் பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள கோர்ட்டு முன்பு தீவிரவாதிகள் கோர்ட்டுக்கு வெளியில் குண்டு வெடிப்பை நடத்தினார்கள். குண்டு வெடித்த சத்தத்தால் கோர்ட்டு வளாகத்தில் திரண்டிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
துருக்கியின் சிஸ்ரேவில் வன்முறையை அடக்கும் சிறப்பு படைப்பிரிவின் தலைமையகத்தை குறிவைத்து குர்திஷ் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உள்ளனர். தாக்குதலில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 50-க்கு அதிகமான பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி கூறும்போது, "உத்தரப் பிரதேசத்தின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சித்தாபூர், பரேலி, லக்னோ ஆகிய நகரங்கள் பெருமளவு பதிக்கப்பட்டுள்ளன.
பெரு நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கைலோமா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால்
4 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால், கட்டிட இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி காலை 9.58 மணியளவில் நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் கோகரஜஹார் மாவட்டத்தில் மக்கள் நெரிசல் அதிகம் மிகுந்த மார்க்கெட்டில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயங்கரவாதிகள் ராணுவ உடையில் வந்ததாக கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. மேலும் 4 அல்லது 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.