மத்திய தரைக்கடலில் அகதிகள் கப்பல் கவிழ்ந்து 42 பேர் பலி

Last Updated : Sep 22, 2016, 02:42 PM IST
மத்திய தரைக்கடலில் அகதிகள் கப்பல் கவிழ்ந்து 42 பேர் பலி title=

எகிப்து மத்திய தரைக்கடலில் கப்பல் கடலில் மூழ்கி 42 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சுமார் 600 பேர் கப்பலில் மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பா நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் எகிப்து நாட்டு கடல் எல்லையில் சென்றபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் மூழ்கியது இதனால் பலர் உயிருக்கு போராடினர்.

இது குறித்த தகவல் எகிப்து கடற்படையினருக்கு கிடைத்ததும் அவர்கள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 200 பேரை உயிருடன் காப்பாற்றியுள்ளதாகவும், 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகார பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடலில் இது போன்ற அகதிகள் படகுகள் கவிழ்ந்து இதுவரை பல உயிர்கள் பலி ஆகியுள்ளன. 

Trending News