அசாம்: பயங்கரவாத தாக்குதல் 13 பேர் பலி

Last Updated : Aug 5, 2016, 03:17 PM IST
அசாம்: பயங்கரவாத தாக்குதல் 13 பேர் பலி title=

அசாம் மாநிலத்தில் கோகரஜஹார் மாவட்டத்தில் மக்கள் நெரிசல் அதிகம் மிகுந்த மார்க்கெட்டில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயங்கரவாதிகள் ராணுவ உடையில் வந்ததாக கூறப்படுகிறது.

பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. மேலும் 4 அல்லது 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் , அசாம் மாநில முதல்வரிடம் தாக்குதல் நிலவரம் குறித்த முழு விவரங்களை கேட்டறிந்தார். நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக ராஜ்நாத் கூறியுள்ளார்.

 

 

மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறுகையில், சம்பவம் எதிர்பாராதது. இதற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்பதை ஆராய்ந்து வருவதாக கூறினார்.

Trending News