பட்ஜெட்டில் அரசு அறிவிக்கும் முக்கிய செய்தி! ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயரும்?

8th Pay Commission: மத்திய அரசு புதிய ஃபிட்மென்ட் காரணிக்கு ஒப்புதல் அளித்தால், அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 லிருந்து ரூ.51480 ஆக அதிகரிக்கும். இது தற்போதுள்ள சம்பளத்தை விட  மூன்று மடங்கு உயரும்.

Written by - RK Spark | Last Updated : Nov 25, 2024, 11:02 AM IST
    அரசு ஊழியர்களின் சம்பளம் 186 சதவீதம் உயரும்.
    ரூ.18000 லிருந்து ரூ.51480 ஆக அதிகரிக்கும்.
    கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.
பட்ஜெட்டில் அரசு அறிவிக்கும் முக்கிய செய்தி! ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயரும்? title=

மத்திய அரசாங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. விரைவில் அவர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் 7வது ஊதிய குழுவின் அடிப்படியில் ஒவ்வொரு மாதமும் ரூ. 18000 அடிப்படை சம்பளம் பெறுகின்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி எல்லாம் சரியாக நடந்தால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவிகிதம் உயரக்கூடும். இதன் பொருள் அவர்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 51,480 சம்பளம் பெறலாம். மத்திய அரசு 2.86 ஃபிட்மென்ட் காரணிக்கு ஒப்புதல் அளித்தால், அரசு ஊழியர்கள் இப்போது வாங்கும் சம்பாதிப்பதை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் பெற முடியும். ஆனால் மத்திய அரசு இந்த புதிய பிட்மென்ட் காரணிக்கு ஒப்புதல் அளிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: மத்திய அரசின் 1 எச்சரிக்கை, 2 குட் நியூஸ்

பிட்மெண்ட் காரணி உயருமா?

8வது ஊதியக் குழுவுடன் ஃபிட்மென்ட் காரணி எண் 2.86 ஆக நிச்சயம் உயரக்கூடும் என்று கூட்டு ஆலோசனை இயந்திரங்களின் தேசிய கவுன்சிலின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 7வது ஊதியக் குழுவுடன் இந்த எண்ணிக்கை முன்பு 2.57 ஆக இருந்தது. 2.86 என்ற புதிய பிட்மெண்ட் காரணி எண்ணை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள தொகை 18,000 ரூபாயில் இருந்து 51,480 ரூபாயாக உயரும், இது கிட்டத்தட்ட 186 சதவிகிதம் அதிகம் ஆகும். ஃபிட்மென்ட் காரணியில் ஏற்படும் மாற்றம், ஊழியர்களின் சம்பளம் மட்டுமின்றி ஓய்வூதியத்திலும் மாற்றத்தை கொண்டு வரும். ஃபிட்மென்ட் காரணி 2.86 ஆக இருந்தால், ஓய்வூதியம் ரூ.9,000-ல் இருந்து ரூ.25,740 ஆக உயரும், அதுவும் 186 சதவீதம் அதிகமாகும்.

2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும்?

இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், 2025-26 பட்ஜெட்டில் 8வது சம்பள கமிஷன் அறிவிக்கப்படலாம் என்று அரசு ஊழியர்கள் காத்துகொண்டு உள்ளனர். 2024-25 பட்ஜெட்டிலும் இந்த ஆணையத்தை உருவாக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு ஊழியர்களின் தொழிற்சங்க தலைவர்கள் சிலர் இது குறித்து கேபினட் செயலாளர் மற்றும் நிதி அமைச்சர்களிடம் பேசியுள்ளனர். 2024 ஜூலை மாதம், தேசிய கூட்டு ஆலோசனை இயந்திர கவுன்சில் என்று அழைக்கப்படும் குழு, கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டது. இந்த கூட்டம் நவம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

2014ம் ஆண்டு அமைக்கப்பட்ட 7வது ஊதியக்குழு 

வழக்கமாக ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் சம்பள கமிஷன் உருவாக்கப்பட்டு அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும். கடைசியாக, 7வது ஊதியக் குழு என்று பிப்ரவரி 2014ல் உருவாக்கப்பட்டது. பின்னர் ஜனவரி 1, 2016 முதல் புதிய ஊதிய விதிகளை பயன்படுத்தத் தொடங்கினர். இதன் காரணமாக, அரசு ஊழியர்களின் சம்பள தொகை ரூ. 7000 லிருந்து ரூ. 18000 ஆகா உயர்ந்தது. தற்போது ​​ஒரு கோடிக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்கள் மத்திய அரசில் பணிபுரிகின்றனர். 8வது ஊதியக் குழு மூலம் தங்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெரிய அளவில் உயரும் என அரசு ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | ரூ.10,000 SIP மூலம் ரூ.1 கோடி கார்பஸ் சேர்க்க எவ்வளவு காலம் ஆகும்? முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News