இன்று அடுத்தடுத்து 2 தாக்குதல் நடைபெற்றது.
தீவிரவாதிகள் முதலில் அவர்கள் கைபர் மலைவாழ் பகுதியில் உள்ள கிறிஸ்தவ காலனியில் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். அதில் ஒருவர் பலியானார். அடுத்த சில மணி நேரத்துக்குள் பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள கோர்ட்டு முன்பு தீவிரவாதிகள் கோர்ட்டுக்கு வெளியில் குண்டு வெடிப்பை நடத்தினார்கள். குண்டு வெடித்த சத்தத்தால் கோர்ட்டு வளாகத்தில் திரண்டிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
அப்போது தற்கொலை தீவிரவாதி ஒருவன் தன் இடுப்பில் கட்டியிருந்த சக்தி வாய்ந்த குண்டை வெடிக்க செய்தான். இதனால் அந்த இடமே அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி சுமார் 52 பேர் ரத்த வெள்ளத்தில் விழுந்தனர்.
தகவல் அறிந்ததும் பாது காப்புப்படை வீரர்களும் போலீசாரும் அந்த கோர்ட்டு வளாகத்தை சுற்றி வளைத்தனர். தற்கொலை படையை சார்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். குண்டு வெடித்த இடத்தில் உடல் சிதறி பலியான 12 பேரின் உடல்களை மீட்டனர். உயிருக்குப் போராடியவர்களை மீட்கப்பட்டு மார்தான் நகரில் உள்ள மருத் துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களால் மார்தான் மாவட்டத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சமபவத்திற்கு ஜமாத்துல் அகரர் என்ற இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது.