கேரள மாநிலம் மலப்புரம் தொகுதி எம்.பி.யாக இருந்தவர் இ. அகமது. முன்னாள் மத்திய மந்திரியான இ. அகமது முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராகவும் இருந்து வந்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இ. அகமது திடீரென மயங்கி விழுந்தார். இவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
இதைத் தொடர்ந்து அவரது உடல் விமானம் மூலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு நேற்று பகல் கொண்டு வரப்பட்டது. இன்று காலை முதல் கண்ணூரில் உள்ள நகரசபை மைதானத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசைக் கண்டித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் என்றும் தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
இந்துவாவை சேர்ந்த பாஜக தொண்டர் ரெமித் என்றவர் குத்திக்கொலை செய்யப்பட்டதால் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் பினராய் என்ற இடத்தில் இந்துவா நிர்வாகி ரெமி மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பிற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதனால் கேரளாவில் அரசுப் பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் இருந்து எடுக்கப்பட்ட 186 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை காணவில்லை என உச்சநீதிமன்றத்தில் வினோத் ராய் தலைமையிலான கமிட்டி அறிக்கை சமர்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் ஜூலை மாதம் ஏடிஎம்., ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ரோமை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 ரோம் நகரை சேர்ந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர்கள் மூன்று பேரின் விசாவும் ஜூலை மாதமே காலாவதியாகி விட்டதாகவும், கொள்ளையில் ஈடுபட்டதாக சிசிடிவி பதிவு மூலம் அடையாளம் காணப்பட்ட கொள்ளையனின் பெயர் கார்பிரியல் மரியன் என தெரிய வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானம் விபத்திற்குள்ளானது. இன்று பகல் 12.45 மணிக்கு துபாயில் விமானம் தரையிறங்கிய போது விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியது. இதனால் பயணிகள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
கேரளாவில் இருந்து மாயமான 20 இளைஞர்களும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துவிட்டதாக உளவுத் துறை உறுதி செய்துள்ளது. அதேசமயம் அம்மாநிலத்தை சேர்ந்த மேலும் பல இளைஞர்கள் ஐஎஸ்ஸில் இணைந்திருக்க கூடும் என்ற தகவலும் வெளியாகி இருப்பதால் அச்சம் எழுந்துள்ளது.
கேரள மாநிலத்தின் காசர்கோட் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு காணாமல் போன 13 பேரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துவிட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து போலீஸார் இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.