கேரளா ராக்கிங் வழக்கு: 5 மாணவர்கள் சரணடைந்தனர், 2 பேர் தலைமறைவு

கேரள போலீஸ் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஒரு ராக்கிங் வழக்கில் ஏழு மாணவர்களில், ஐந்து பேர் சரணடைந்தனர் என்று கூறினார்.

Last Updated : Dec 19, 2016, 12:01 PM IST
கேரளா ராக்கிங் வழக்கு: 5 மாணவர்கள் சரணடைந்தனர், 2 பேர் தலைமறைவு title=

கோட்டயம்: கேரள போலீஸ் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஒரு ராக்கிங் வழக்கில் ஏழு மாணவர்களில், ஐந்து பேர் சரணடைந்தனர் என்று கூறினார்.

ஏழு சீனியர் மாணவர்கள் அந்த கல்லூரி படிக்கும் முதலாம் ஆண்டு மாணவரை கொடூரமாக ராக்கிங் செய்தனர். ராக்கிங் செய்யப்பட்ட அந்த மாணவன் சிறுநீரக பாதிப்பு கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ராக்கிங் செய்த 7 மாணவர்களில் 5 பேரை சங்கனாச்சேரி போலீஸ் துணை கண்காணிப்பாளர்களிடம் நேற்று இரவு ஒப்படைத்தனர்.

போலீஸ்ன் தகவலின் படி, மொத்தம் 7 குற்றவாளிகள், இதில் இன்னும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர் என்று குறிப்பிடதக்கது.

கடந்த டிசம்பர் 2-ம் தேதி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் 7 பேர் ராக்கிங் கொடுமை செய்துள்ளனர். 

மதுபானத்தில் கொடிய தன்மை கொண்ட பவுடரை கலந்து குடிக்குமாறு கட்டாயப்படுத்திய சீனியர் மாணவர்கள் கடினமான உடற்பயிற்சிகளை மணிக்கணக்கில் செய்யுமாறு கட்டாயப்படுத்தி கொடுமை செய்துள்ளனர். இதில் கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவர் ஆபத்தான நிலையில், திரிசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு டயலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

கடந்த 10 தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவருக்கு மூன்று முறை டயலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான 2 மாணவர்களை தேடி வருகின்றனர்.

Trending News