கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

Last Updated : Oct 13, 2016, 10:18 AM IST
கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் title=

இந்துவாவை சேர்ந்த பாஜக தொண்டர் ரெமித் என்றவர் குத்திக்கொலை செய்யப்பட்டதால் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 

கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் பினராய் என்ற இடத்தில் இந்துவா நிர்வாகி ரெமி மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பிற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதனால் கேரளாவில் அரசுப் பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழக எல்லை வரை மட்டுமே கேரளாவிற்கு இயக்கப்படும் தமிழக பஸ்கள் அனுமதிக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து செல்லும் பஸ்கள் எல்லைப்பகுதியான களியக்கா விளையில் நிறுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

Trending News