துபாயில் தரையிறங்கிய 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானத்தில் தீ

Last Updated : Aug 3, 2016, 03:31 PM IST
துபாயில் தரையிறங்கிய 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானத்தில் தீ title=

திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானம் விபத்திற்குள்ளானது. இன்று பகல் 12.45 மணிக்கு துபாயில் விமானம் தரையிறங்கிய போது விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியது. இதனால் பயணிகள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என கூறப்படுகிறது. 

தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. விபத்தில் எவ்வாறு தீப்பிடித்தது, விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் 282 பேர் பயணம் செய்துள்ளனர்

Trending News