திருவனந்தபுரம் பத்பநாப சுவாமி கோயில் அருகே தீ விபத்து

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Last Updated : Feb 26, 2017, 11:24 AM IST
திருவனந்தபுரம் பத்பநாப சுவாமி கோயில் அருகே தீ விபத்து title=

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கோயிலின் வடக்கு வாயிலில் இருந்து 25 மீட்டர் தொலைவில் உள்ள குடோனில் தீ  விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் 16 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

 

 

 

 

இந்த தீ விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர். கோயில் வளாகம் அருகிலுள்ள குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைக்கு இன்று அதிகாலையில் சிலர் தீவைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த தீயானது அருகிலுள்ள தபால் நிலையம் மற்றும் குடோனுக்கு பரவியது. 

சமீபகாலங்களில் பத்மநாப சுவாமி கோயில் வளாகம் அருகே நடக்கும் 3ஆவது தீ விபத்து இதுவாகும். குப்பைகளை சரியான முறையில் அகற்றாததே இதுபோன்ற தீ விபத்துகளுக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Trending News