ஆதார் அட்டை என்பது இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஒரு சிறப்பு அடையாள அட்டை போன்றது. இது ஒரு தனித்துவமான 12 இலக்க எண்ணைக் கொண்டுள்ளது. ஆதார் கார்ட் வங்கி மற்றும் தொலைபேசி இணைப்பு போன்ற முக்கியமான சேவைகளை பயன்படுத்த மக்களுக்கு உதவுகிறது. ஆதார் எண் பல விஷயங்களை எளிதாக்கும் அதே வேளையில், அதை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் சில கயவர்கள் பணத்தைத் திருடவோ அல்லது உங்களது தனிப்பட்ட தகவல்கள் மூலம் உங்களை போலவே நடித்து மற்றவர்களை ஏமாற்ற முயற்சி செய்யலாம். இது போன்ற சிக்கலில் நீங்கள் சிக்கி கொண்டால் நீங்கள் நிதி இழக்கும் அபாயம் ஏற்படலாம் அல்லது பெரிய பிரச்சனைகளில் சிக்கி கொள்ள வாய்ப்புள்ளது.
எனவே உங்கள் ஆதார் எண்ணை யாரும் தவறாகப் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். பயணங்களின் போதும், ஹோட்டல் அறைகளில் அல்லது வங்கிகளில் உங்களது ஆதார் விவரங்களை கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். மக்கள் தங்கள் ஆதாரை பாதுகாப்பாக வைத்திருக்கவும், அதனை யாராவது தவறாக பயன்படுத்துகிறீர்களா என்பதை தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. இதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சில சிறப்பு அம்சங்களை உருவாக்கி உள்ளது.
உங்கள் ஆதார் எண்ணின் பயன்பாட்டை கண்டறிவது எப்படி?
முதலில் myAadhaar போர்ட்டலுக்குச் செல்லவும். பிறகு உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு, 'OTP மூலம் உள்நுழை' என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். உங்கள் ஆதார் கணக்கை அணுக அதை உள்ளிடவும். பிறகு ‘ஒப்புதல் வரலாறு’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் தேதி வரம்பைத் தேர்வு செய்யவும். இதனை சரிபார்த்து சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் ஏதேனும் இருந்தால் குறித்துக்கொள்ளவும். அங்கீகரிக்கப்படாத செயலை நீங்கள் கண்டால், உடனடியாக UIDAIக்கு புகாரளிக்கவும்.
எப்படி புகார் அளிப்பது?
உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், 1947 என்ற தொலைபேசி எண்ணுக்கு இலவசமாக அழைக்கலாம். மேலும் நீங்கள் சொல்ல விரும்புவதை எழுதி help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இந்த வழியில் உங்கள் ஆதார் தகவலை பாதுகாக்க வைத்திருக்க முடியும்.
ஆதார் பயோமெட்ரிக்கை பாதுகாப்பது எப்படி?
உங்கள் ஆதார் கைரேகைகள் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் சிறப்பு அம்சத்தை UIDAI கொண்டுள்ளது. உங்கள் தகவலை நீங்கள் லாக் செய்து கொள்ளலாம். இதை செய்தால், யாராவது உங்கள் ஆதார் விவரங்களைப் பார்க்க முயன்றாலும், அவர்களால் உங்கள் கைரேகைகள் அல்லது தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்த முடியாது. உங்கள் ஆதார் தகவலைப் பாதுகாப்பாக வைத்திருக்க, உங்கள் கைரேகை மற்றும் கண் ஸ்கேன் ஆகியவற்றை வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி பூட்டலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ