2024-ல் முதல் நாளிலேயே அதிக வசூல் பார்த்த டாப் 5 கோலிவுட் படங்கள்! No.1படம் எது?

Tamil Movies 2024 With Highest Opening Collection: இந்த ஆண்டில், பல படங்கள் வெளியாகி இருந்தாலும், குறிப்பிட்ட 5 படங்கள் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் அடித்திருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Nov 25, 2024, 11:39 AM IST
  • 2024ல் வெளியான படங்கள்!
  • முதல் நாள் கலெக்‌ஷனே அதிகம்!
  • டாப்பில் இருக்கும் படம் எது?
2024-ல் முதல் நாளிலேயே அதிக வசூல் பார்த்த டாப் 5 கோலிவுட் படங்கள்! No.1படம் எது? title=

Tamil Movies 2024 With Highest Opening Collection: 2024ஆம் ஆண்டை, இரண்டு பாகங்களாக பிரிக்கலாம். ஒன்று, ஜூலைக்கு முன்பு இன்னொன்று ஜூலைக்கு பின்பு. முதல் ஆறு மாதங்களுக்கு, எந்த பெரிய ஹீரோக்களின் படங்களுமே பெரிதாக தமிழில் வெளியாகவில்லை. இந்தியன் 2 படம் பிள்ளையார் சுழி போட, பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக ஆரம்பித்தன. இதில் குறிப்பிட்ட 5 படங்கள் உலகளவில் முதல் நாளிலேயே நல்ல வசூலை பெற்றிருக்கின்றன. அவை என்னென்ன படங்கள் என்பதை, இங்கு பார்ப்போம். 

5.ராயன்:

முதல் நாளில், உலகளவில் அதிக பாக்ஸ் ஆபிஸ் பெற்ற தமிழ் படங்களின் லிஸ்டில், 5வது இடத்தில் இருக்கிறது ராயன். தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சரவணன் உள்ளிட்டோர் வில்லன்களாக நடித்திருந்தனர். சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் தனுஷுக்கு சகோதரர்களாக நடிக்க அவருக்கு தங்கையாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். இந்த படம், சுமார் ரூ.65-70 கோடி பட்ஜெட்டில் தயாரான நிலையில், மொத்தமாக ரூ.160 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் ஜூலை மாதம் 26ஆம் தேதி வெளியான இந்த படம், முதல் நாளிலேயே உலகளவில் சுமார் ரூ.32 கோடி ரூபாயை வசூலித்ததாம். 

4.அமரன்:

தீபாவளியை முன்னிட்டு, கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியான படம், அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.

ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்கியிருந்தார். 2014ஆம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய சம்பவமாக இருந்தது, மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணம். இந்த சம்பவத்தையும், முகுந்தின் வாழ்க்கையையும் வைத்து எழுதப்பட்டிருந்த இந்த படம், 18 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படம், தற்போது வரை சுமார் ரூ.275 கோடி ரூபாயை எட்டி வருவதாக கூறப்படுகிறது. முதல் நாளில், இப்படம், சுமார் ரூ.42 கோடியை தொட்டதாம். 

3.கங்குவா:

சமீபத்தில் வெளியாக நெகடிவ் விமர்சனங்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் படம், கங்குவா. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருக்கிறார். கார்த்தி கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். முன் ஜென்ம கதையை வைத்து உருவாகியிருக்குமிந்த படத்தை சிவா இயக்கியிருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை, காதுகளை கிழிக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம், முதல் நாளிலேயே உலகளவில் சுமார் ரூ.58 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | 2024-ல் வெளியான டாப் 5 தமிழ் திரைப்படங்கள்! முதல் இடத்தில் யார் தெரியுமா?

2.வேட்டையன்:

ரஜினிகாந்த் நடிப்பில், அக்டோபர் 10ஆம் தேதி வெளியான படம், வேட்டையன். இந்த படத்தை, டி.ஜே.ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதில், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கூடவே முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். இந்த படம், வெளியான முதல் நாளிலேயே சுமார் ரூ.69 கோடி ரூபாயை கலெக்ட் செய்ததாம். 

1.தி கோட்:

இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக பார்க்கப்படுகிறது, தி கோட் (The Greatest Of All Time)விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய படமான இந்த படத்தை, வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

யுவன் இசையில் பாடல்கள் ஹிட் ஆகின. சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம், வெளியான முதல் நாளே உலகளவில், ரூ.126 கோடி வரை கலெக்ட் செய்ததாம். திரையரங்குகளில் ஓடிய வரை, இப்படம் சுமார் ரூ.455 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | 2024-ல் பெரிதும் ஏமாற்றமளித்த 2 தமிழ் படங்கள்! ஒன்னு கங்குவா..இன்னொன்னு எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News