பிறர் தவறு செய்யும் போது அவர் மனதை புண்படுத்தாமல் நேர்பட பேசுவது எப்படி?

நம்மில் சிலருக்கு, பிறர் செய்யும் தவறுகளை முகத்திற்கு நேராக சுட்டிக்காட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதை, அவர்கள் மனதை புண்படுத்தாமல் செய்வது எப்படி?   

Written by - Yuvashree | Last Updated : Nov 16, 2024, 05:28 PM IST
  • ஒருவரது தவறை சுட்டிக்காட்டுவது எப்படி?
  • மனதை புண்படுத்தாமல் செய்ய வேண்டும்
  • எப்படி தெரியுமா?
பிறர் தவறு செய்யும் போது அவர் மனதை புண்படுத்தாமல் நேர்பட பேசுவது எப்படி?  title=

மனிதர்கள் அனைவரும் அப்படியே 100 சதவிகிதம் சரியானவர்களாக இருந்து விட முடியாது. அனைவருக்குள்ளும் குறை, நிறைகள் இருக்கும். அனைவரும் தவறு செய்யவும், அதை திருத்திக்காெள்ளவும் பழக்கப்பட்டவர்களாக இருப்போம். ஆனால், ஒருவர் உங்கள் எதிரில் தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருக்கிறார்கள் என்றாலோ, அந்த தவறு உங்களை ஒரு வகையில் பாதிக்கிறது என்றாலோ, அப்போது அவர்களிடம் அதை முகத்திற்கு நேராக கூறி விட வேண்டியதும் அவசியம். ஆனால் அதே சமயத்தில் அதை மனதை புண்படுத்தாமல் கூறுவதும் மிகவும் அவசியம். அதை எப்படி செய்வது?

சரியான நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும்:

ஒருவரிடம் பேசுவதற்கு முன்னர், இடம்-பொருள்-ஏவல் பார்த்து பேச வேண்டியது அவசியம். அவர்கள் ஏற்கனவே, வேறு ஏதேனும் பிரச்சனையில் இருக்கும் போது நீங்களும் ஏதேனும் கூறினால், அது இன்னும் அவர்களை அசிங்கப்படுத்துவது போல ஆகி விடும். 

முதலில் அவர்கள் ரிலாக்ஸாக இருக்கும் ஒரு நேரத்தையும் இடத்தையும் தேர்வு செய்ய வேண்டும். இருவரும் எந்த இடையூறும் இன்றி பேசும் இடத்தை தேர்வு செய்து, ஒரு காபி அல்லது டீ குடித்துக்கொண்டு பேசலாம். 

பாசிடிவாக ஆரம்பிக்கவும்..

நாம் ஒரு கடினமான விஷயத்தை ஒருவரிடம் கூறுகிறோம் என்றால், முதலில் பாசிடிவாக ஆரம்பிக்க வேண்டும். அதை கேட்பவர்கள், நாம் நெகடிவாக கூற வருவதை, பாசிடிவான விஷயத்துடன் சேர்த்து கூறினால், அதை நன்றாக ஏற்றுக்கொள்கின்றனர். உதாரணத்திற்கு, ஒருவர் செய்யும் வேலை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அவர் செய்ததில் உங்களுக்கு பிடித்த வேலையை முதலில் கூறவும். பின்பு, ‘இந்த வேலையில், இதை மாற்றிக்கொள்ளலாம்’ அல்லது ‘இதை செய்ய வேண்டாம்’ என குறிப்பிடலாம். 

நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும்:

ஒருவரது நடவடிக்கைகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அந்த நடவடிக்கைகள் மீது மட்டும் கவனம் செலுத்தவும். அதை விட்டுவிட்டு, அந்த நபர் மீது தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்களை ஏற்படுத்தும் வகையில் வார்த்தைகளை விட வேண்டாம். இது பின்னர் பர்சனல் அட்டாக் ஆக மாறி விடும். 

“நீங்கள் எப்போதும் இந்த வேலைகளை செய்வதில்லை” என்று கூறுவதை விட, “கடைசியாக உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகள் இன்னும் முடிக்கப்படவில்லை. அதை சரி பார்க்கவும்” என்று கூறலாம். 

‘நான்’ என்ற வார்த்தையை உபயோகிக்கவும்:

தவறு அவர் மீதாகவே இருந்தாலும், அவர் மீது மொத்தமாக பழி போடுவதை விட்டுவிட்டு, “உங்களுடைய இந்த நடவடிக்கை, என்னை இப்படி உணரச்செய்தது” என்று கூறலாம். இதனால், அந்த நபர், தன் மீது ஒருவர் பழி போட்டதாக உணர மாட்டார். 

புரிந்துணர்வு:

ஒருவரை திட்டுவதற்கு முன்பும், குறை கூறுவதற்கு முன்பும், அவரை புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்போது, அந்த நபருக்கு “இவர் நம் தவறையும் உணர்ந்து கொள்கிறார், இந்த தவறையும் புரிந்து கொள்ளவும் செய்கிறார்” என்று அவர் நினைப்பார். இதனால், தன் தவறையும் அவர் திருத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. 

மேலும் படிக்க | சுடு தண்ணீர் vs குளிர்ந்த நீர் : குளிர் காலத்தில் எந்த தண்ணீரில் குளிக்கலாம்?

மேலும் படிக்க | தலைக்கு மேல் கோபம் வரும் போது..மனதிற்குள் ‘இதை’ சொல்லுங்க! லேசா உணருவீங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News