பத்மநாபசுவாமி கோயில்" ரூ.186 கோடி மதிப்பிலான தங்கத்தை காணவில்லை

Last Updated : Aug 16, 2016, 01:26 PM IST
பத்மநாபசுவாமி கோயில்" ரூ.186 கோடி மதிப்பிலான தங்கத்தை காணவில்லை title=

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் இருந்து எடுக்கப்பட்ட 186 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை காணவில்லை என உச்சநீதிமன்றத்தில் வினோத் ராய் தலைமையிலான கமிட்டி அறிக்கை சமர்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள ரகசிய அறைகளை திறக்க கடந்த 2011-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மொத்தம் உள்ள 6 ரகசிய அறைகளில் 1 அறை தவிர மற்ற அறைகள் திறக்கப்பட்டன. இதில் பல விலைமதிக்க முடியாத தங்கங்கள் இருந்தது. இதையடுத்து கோயிலுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ரகசிய அறைகளில் இருந்து கிடைத்த தங்கங்களை மதிப்பீடு செய்ய உச்சநீதிமன்றம், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்திய மாஜி வினேத்ராய் தலைமையிலான கமிட்டியை கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமித்தது.

இது குறித்து வினோத்ராய் தலைமையிலான தற்போது கமிட்டி ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்பித்துள்ளது. இந்த அறிக்கையில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த அறிக்கையின்படி 186 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 769 தங்க பானைகள் எங்கு உள்ளது என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், தங்கத்தை சுத்திகரிக்கும் முறையில் விகிதம் மாறியதால் ரூ.2.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் எஞ்சிய அளவு உள்ள தங்கம் ஒப்பத்தகாரரிடம் இருந்து மீட்காமல் உள்ளதால் அதில் 59 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாவும், கன்னிகா கவுன்டிங் முறையில் வெளிப்படை தன்மையில்லை எனவும் ரூ. 14.18 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் சட்ட விரோதமாக பதிவேற்றில் ஏற்றாமல் இருப்பதாகவும், ரூ.14 லட்சம் மதிப்பிலான வெள்ளி பார் காணாமல் போயுள்ளதாகவும், கோயில் நிர்வாகம் கடந்த 1970-ம் ஆண்டு ரூ. 14 லட்சம் மதிப்புள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தை விற்றத்கு எந்த வித ஆவணங்களையும் இல்லாமல் இருப்பதாகவும், கோயில் நிர்வாக செலவு அசாதாரணமாக ஆண்டிற்கு ஆண்டு பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கமிட்டி சார்பில் கோயில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பில் பல்வேறு மாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. பல விலை மதிக்க முடியாத பொருட்கள் இருப்பதால் பாதுகாப்பை சற்று அதிகரிக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளது.

Trending News