இந்தியாவில் அதிகரித்து வரும் சகிப்பின்மை மற்றும் வன்முறை ஆகியவற்றில் இருந்து குடிமக்களை பாதுகாத்து குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வரவேண்டும் என இந்திய அரசாங்கத்தினை அமெரிக்கா கேட்டு கொண்டுள்ளது.
மாட்டிறைச்சி குறித்த வன்முறைகள், மத்திய பிரதேசத்தில் எருமை இறைச்சி கொண்டு சென்ற இரண்டு பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றை குறிப்பிட்டு அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளர் ஜான் கிரிபி கூறும்போது:-
நாங்கள் இந்திய மக்கள், இந்திய அரசு ஆகியவற்றின் பக்கம் இருக்கிறோம். மதச்சுதந்திரம் நடைமுறைப்படுத்துவதில் ஆதரவு அளிக்கிறோம், அனைத்து வகையான பேச்சு சுதந்திரத்தை ஆதரிக்கிறோம் அனைத்து விதமான சகிப்பின்மையை எதிர்க்கிறோம். உலகில் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளும் நாடுகளில் நாங்கள் மேற்கொள்வது போன்று, தனது அதிகாரத்திற்குரிய ஒவ்வொரு விசயத்தினையும் அரசாங்கம் மேற்கொண்டு குடிமக்களை காத்து, குற்றத்திற்கு பொறுப்புமிக்கவர்களை கைது செய்ய வேண்டும் என்பதனை நாங்கள் வலியுறுத்துகிறோம் என கூறினார்.
மேலும் இந்திய மக்கள் தங்களது சகிப்புத்தன்மை மற்றும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் ஏற்புடைமை கொள்கையை உணர வேண்டும், இது இந்திய, அமெரிக்க உறவுகளின் ஆழமான நலன் சார்ந்தது” என்றார்.இந்திய மக்களுடன் தொடர்ந்து பணியாற்ற அமெரிக்கா முன்வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.