Sani Peyarchi Palangal: மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் யாருக்கு அதிக நன்மை? எந்த ராசிகளுக்கு பண வரவு? சனி பெயர்ச்சி ராசிபலனை இங்கே காணலாம்.
Sani Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கபப்டுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். மார்ச் மாதம் சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது. சனி பகவான் கும்பத்திலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். ஒரே ராசியில் அவர் சுமார் 2 1/2 ஆண்டுகளுக்கு இருப்பதால், ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது.
சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். இன்னும் சில நாட்களில், மார்ச் மாதம் அவர் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நற்பலன்களும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் தெளிவும் அமைதியும் இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
துலாம்: சனி பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு பல வித நல்ல பலன்களை அளிக்கும். துலாம் ராசி சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகளில் ஒன்று. துலாம் ராசியில் சனி எப்போதும் உச்சத்தில் இருப்பார். இந்த வருடம், சனியின் அருளால் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்குகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பல வித சிறந்த பலனைப் பெறுவார்கள். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பண வரவு அதிகமாகும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை அனுபவிப்பீர்கள். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மகரம்: சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். இவர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் முடிவுக்கு வரும். மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவான் மீன ராசியில் பிரவேசிப்பது பல்வேறு நன்மைகளைத் தரும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சனியின் ஆசிகள் எப்போதும் இருக்கும்.
மீனம்: சனி பகவான் மார்ச் 29, சனிக்கிழமை இரவு 11:01 மணிக்கு மீன ராசியில் பெயர்ச்சி ஆவார். 30 வருடங்களுக்குப் பிறகு, சனி மீன ராசிக்குத் திரும்புகிறார். சனி கிரகம் மிக மெதுவாக நகரும் கிரகம். சனி பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு மிக சாதகமாக இருக்கும். மீன ராசிக்காரர்கள் மார்ச் மாதத்திற்குப் பிறகு அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார்கள்.
மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். நல்ல எண்ணம் கொண்டு நல்ல செயல்களை செய்யும் நபர்கள் சனி பகவானை கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
ஏழரை சனி: ஏழரை சனி பாதிப்பு பெரும்பாலும் பலரை மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்குகிறது. ஆனால், இதற்கு பல பரிகாரங்களும் உள்ளன. சனிக்கிரக தோஷம் மற்றும் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பரிகாரம் செய்ய திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று அவரை வழிபடலாம். இங்கே அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷம் நிவர்த்தியாகி, சனி அருளால் நன்மைகள் ஏற்பட்டு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சனி பகவானின் அருள் பெற, “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை ஜபிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும். மேலும், 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தையும் தினமும் கூறலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.