Virat Kohli captaincy IPL 2025: கடந்த ஆண்டு சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி பழைய வீரர்களை வெளியேற்றி முற்றிலும் புதிய அணியாக தயாராகி உள்ளது. ஐபிஎல் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை ஒருமுறை கூட ஆர்சிபி கோப்பையை வென்றது இல்லை. இதனால் இந்த ஆண்டு எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளது. ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக விராட் கோலி (ரூ. 21 கோடி), ரஜத் படிதார் (ரூ. 11 கோடி) மற்றும் யாஷ் தயாள் (ரூ. 5 கோடி) ஆகிய வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொண்டது.
மேலும் படிக்க | 2025 ஐபிஎல்-லில் வரவுள்ள கடுமையான மாற்றங்கள்! ஐசிசி விதிகள் பின்பற்றப்படும்!
ஏலத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆர்சிபி
ஆர்சிபி அணி ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டது. பல சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.8.75 கோடிக்கும், ஃபில் சால்ட்டை ரூ.11.50 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது. இந்திய விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மாவை ரூ.11 கோடிக்கு எடுத்தனர். மேலும் பவுலிங்கில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை ரூ. 12.5 கோடிக்கும், புவனேஷ்வர் குமாரை குறைந்த தொகையிலும் ஏலத்தில் எடுத்தனர். இருப்பினும் ஆர்சிபி அணி ஒரு கேப்டன்சி பிளேயரை அணியில் எடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக பாப் டூ பிளசிஸ் ஆர்சிபி கேப்டனாக செயல்பட்டார். ஆனால் அவரை மீண்டும் அணியில் எடுக்கவில்லை.
புதிய கேப்டன் யார்?
தற்போது அணியில் உள்ள வீரர்களை பொறுத்தவரை யாருமே கேப்டன்சி அனுபவம் கொண்டவர்கள் இல்லை. சமீபத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த விராட் கோலி, ஐபிஎல் 2025ல் ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இந்திய அணியின் கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் விராட் எந்த ஒரு அணிக்கும் கேப்டனாக செயல்பட விரும்பவில்லை. இதனால் ஆர்சிபி அணியின் கேப்டன்சியையும் நிராகரிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை விராட் கோலி நிராகரித்தால் இரண்டு பேரை கேப்டனாக நியமிக்கலாம் என்று அணி நிர்வாகம் திட்டம் வைத்துள்ளனர். அவர்கள் யார் என்று பார்ப்போம்.
புவனேஷ்வர் குமார்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆர்சிபி கேப்டன்சியை ஏற்கலாம். அதிக அனுபவம் கொண்ட இவர் சிறந்த தேர்வாக இருக்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக SRH அணியில் சிறப்பாக விளையாடி வந்தார். எனவே, அவர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டால் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும்.
ரஜத் படிதார்
ஐபிஎல் 2025ல் விராட் கோலி கேப்டன் பதவியை ஏற்கவில்லை என்றால், ரஜத் படிதார் கேப்டனாக தேர்வு செய்யப்படலாம். இது எதிர்காலத்திற்கும் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இளம் வீரரான ரஜத் படிதார் சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். உள்நாட்டு தொடர்களில் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.
ஐபிஎல் 2025க்கான ஆர்சிபி அணி
பேட்டர்ஸ் - விராட் கோலி, ரஜத் படிதார், தேவ்தத் படிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா, டிம் டேவிட்
வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் - ரொமாரியோ ஷெப்பர்ட், மனோஜ் பந்தேஜ்
சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டோன், க்ருனால் பாண்டியா, ஜேக்கப் பெத்தேல், ஸ்வப்னில் சிங்
விக்கெட் கீப்பர்கள் - ஜிதேஷ் சர்மா, பில் சால்ட்
வேகப்பந்து வீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், ரசிக் தார், நுவான் துஷாரா, லுங்கி என்கிடி, அபிநந்தன் சிங்
சுழற்பந்து வீச்சாளர்கள் - சுயாஷ் சர்மா, மோஹித் ரதி
மேலும் படிக்க | இந்திய அணியை சோதித்த பிரைடன் கார்ஸ்... எந்த ஐபிஎல் அணியில் இருக்கிறார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ