குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி ஒரு செயலை செய்ய வைப்பது அவர்களை மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு அழைத்துச் செல்லும். மேலும் குழந்தைகள் தங்களின் சுய விருப்பத்தை விரும்புகின்றனர். அதற்குப் பெற்றோர்களின் அனுமதியைப் பெறுவதில் மிகவும் சிரமத்தை எடுக்கின்றனர். இது அவர்களின் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுகிறது.
குழந்தைகள் எதற்காக மன அழுத்தம் ஆகின்றனர் என்று பெரும்பாலான பெற்றோர்கள் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் இது உங்கள் பிள்ளைகளின் மன நிலையை மிகவும் மோசமாக்கிவிடும் என்று நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவதன் மூலம் பெற்றோர்கள் இந்த 8 தவறுகளை அதிகம் செய்கின்றனர்.
உணர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்: குழந்தைகளின் கட்டுப்படுத்தல் அவர்களின் உள்ளார்ந்த உணர்ச்சியையும் சேர்த்துக் கட்டுப்படுத்துவதற்குச் சமம் என்று கூறப்படுகிறது.
கட்டாயம்: பிடிக்காதவற்றைக் கட்டாயப்படுத்திச் செய்ய வைத்தல் அல்லது படிப்பு விஷயங்களில் அவர்களுக்குப் பிடிக்காத ஒன்றைச் சேர்த்துவிடுவது குழந்தைகளின் மனதை அதிகம் பாதிக்கும்.
விருப்பமில்லாத ஒரு செயல்பாடுகளில் குழந்தைகளைக் கட்டாயப்படுத்திச் செய்ய வைப்பது போன்ற செயல்கள் பிள்ளைகளின் மனநிலையை மோசமாக்கும் என்று கூறப்படுகிறது.
நம்பத்தக்க விஷயங்களில் குழந்தைகளைச் செய்யக் கட்டாயப்படுத்துவது அவர்களின் சுயமரியாதை உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
ஆடை அல்லது பயணம் சுதந்திரம்: குழந்தைகளை அவர்களுக்குப் பிடித்த ஆடை அணிய அனுமதிக்காமல் இருத்தல் மற்றும் கட்டாயப்படுத்திப் பிடிக்காத ஆடையை அணிய வைப்பது போன்ற செயல்கள் அவர்களின் உணர்ச்சியை அதிகம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
சமூகத்தின் இணைப்பு: உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரிடம் குழந்தைகளை அவர்கள் விருப்பத்திற்கேற்ப அனுமதிக்க வேண்டும். மாறாக அவர்களைக் கட்டாயப்படுத்தியோ அல்லது அடக்கி வைத்தோ மனதைக் காயப்படுத்தக்கூடாது.
பழி: குழந்தைகளை அதிகம் குறிவைத்து அவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசுவது அல்லது அவர்களை மற்றவர்களுடன் ஒப்பீட்டு கட்டாயப்படுத்திப் பழி சுமப்பது போன்ற தவறுகள் பெற்றோர்கள் செய்யக்கூடாது.
கல்வி அழுத்தம்: பெரும்பாண பெற்றோர்கள் செய்யும் தவறுகள் இந்த கல்வி அழுத்தம். குழந்தைகளை அதிக மதிப்பெண் எடுக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துதல் மற்றும் வகுப்பறையில் சிறந்த மாணவராக விளங்க வைக்கக் கட்டாயப்படுத்துதல் போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.