Pa Ranjith | சென்னையில் நடைபெறும் உணவுத் திருவிழாவில் பீப் கறி (மாட்டிறைச்சி) புறக்கணிக்கப்பட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம் சாட்டிய நிலையில், தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
Coimbatore Latest News: கோவையில் அரசு பள்ளி மாணவி மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக ஆசிரியர் துன்புறுத்தலை அனுபவித்ததாக மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
Health Benefits of Beef : மாட்டிறைச்சியால் தீமைகள் அதிகம் என கருத்துகள் பகிரப்பட்டு நிலையில், அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்பது குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
மாட்டிறைச்சியின் பெயரால் பாஜக அரசு செய்யும் அற்பத்தனமான அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடலா? இல்லை ஆரிய மாடலா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அபுபக்கர் தனது ட்விட்டரில் மாட்டுகறி புகைப்படத்தை பதிவிட்டதற்கு, சென்னை காவல்துறை தேவையற்ற பதிவு என கமெண்ட் செய்தது சர்ச்சையான நிலையில், அந்த பதிவை காவல்துறை நீக்கியுள்ளது.
'ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்து' என்று சிலர் கூறுகிறார்கள்... ஆனால் சிலர் 'அனைவரின் விருப்பங்களையும் மதிக்க வேண்டும்' என்று கூறுகிறார்கள். ஆனால் இதில் எது சிறந்தது என்பது புரியாத ஒரு புதிர்.
ஒரு வினோதமான வளர்ச்சியில், மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் திங்களன்று மாட்டிறைச்சி சாப்பிடும் மக்களை 'மாட்டிறைச்சி சாப்பிட்டதற்கு' பதிலாக நாய் இறைச்சியை சாப்பிடலாம் என தெரிவித்துள்ளார்.
கடந்த திங்ககிழமை அன்று மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் மாட்டுகறி திருவிழா நடத்தினார்கள். இந்நிலையில், கேரள மாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்கின்ற மாணவன் நேற்று தாக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி-ல் சூரஜ் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
மாடுகள் விற்பனை தடையை குறித்து எந்த வித நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் தமிழக அரசை, அடிமை அரசாக மாறும் பினாமி அரசு என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதைக்குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டதாவது:-
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் விஷயத்தில் மத்திய அரசு மார்பில் குத்தினால், தமிழக அரசு முதுகில் குத்தியிருக்கிறது. மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடும் மத்திய அரசின் அத்துமீறலைக் கண்டித்து தமிழக அரசு இதுவரை குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது.
இறைச்சிக்காக பசு, காளை, கன்று, ஒட்டகம் விற்கக் கூடாது என்று மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
மத்திய அரசின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. மாட்டு இறைச்சி விற்பனையை தொடர தனிச்சட்டம் கொண்டு வந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரளா மற்றும் புதுச்சேரி அரசு கூறி உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டு இறைச்சி தடையை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் நாளை( 31-ம் தேதி) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இதைக்குறித்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் வகையில், மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாட்டு இறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், தி.மு.கழகம் தனது எதிர்ப்பினைத் தொடக்கத்திலேயே பதிவு செய்தது.
இந்தியாவில் அதிகரித்து வரும் சகிப்பின்மை மற்றும் வன்முறை ஆகியவற்றில் இருந்து குடிமக்களை பாதுகாத்து குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வரவேண்டும் என இந்திய அரசாங்கத்தினை அமெரிக்கா கேட்டு கொண்டுள்ளது.
மாட்டிறைச்சி குறித்த வன்முறைகள், மத்திய பிரதேசத்தில் எருமை இறைச்சி கொண்டு சென்ற இரண்டு பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றை குறிப்பிட்டு அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளர் ஜான் கிரிபி கூறும்போது:-
மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசூர் என்ற ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் மாட்டு இறைச்சியுடன் வந்த இரு முஸ்லீம் பெண்களை ஒரு கும்பல் சரமாரியாக அடித்து உதைத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.