Unified Pension System: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஒரு விருப்பமாக செயல்படுத்தப்படும். ஏற்கனவே இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நேற்று இதற்கான நெறிமுறைகள் வெளியாயின.
UPS எப்போது அமலுக்கு வரும்?
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். மேலும் இது தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள ஊழியர்களுக்கான மாற்றுத் திட்டமாக இருக்கும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கம் என்ன?
அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிலையான ஓய்வூதியம் வழங்குவதும், அதன் மூலம் அவர்களின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதும் UPS இன் முக்கிய நோக்கமாகும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், தேசிய ஓய்வூதிய முறை மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Unified Pension System: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)
யுபிஎஸ் திட்டத்தின் கீழ், பணியாளர் கடைசியாக பெற்ற 12 மாத அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வு பெறும் போது ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கு, பணியாளர் குறைந்தது 25 ஆண்டுகள் சேவையை முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தில், ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். அதே நேரத்தில் அரசாங்கம் 18.5 சதவீதத்தை பங்களிக்கும். இது தவிர, ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, ஓய்வூதியத்தில் 60 சதவீதம் அவரது துணைவருக்கு வழங்கப்படும். அகவிலைப்படியைப் போலவே, ஓய்வூதியதாரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அகவிலைப்படி நிவாரணமும் வழங்கப்படும்.
National Pension System: தேசிய ஓய்வூதிய முறை (NPS)
NPS-ல், ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 10 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். ஆனால், இதில் உத்தரவாதமான ஓய்வூதியம் இல்லை. ஓய்வு பெறும்போது, ஊழியர்கள் தங்கள் வைப்புத்தொகையில் 60 சதவீதத்தை மொத்தமாக எடுக்கலாம். மீதமுள்ள 40 சதவீதத்தை வருடாந்திரத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். NPS பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது, எனவே அதன் வருமானம் நிலையற்றதாக இருக்கலாம்.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)
OPS திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் போது கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50 சதவீத ஊதியம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இதற்கு ஊழியர்கள் தரப்பிலிருந்து எந்த பங்களிப்பும் தேவையில்லை. அது ஒரு நிலையான ஓய்வூதியத் திட்டமாகும். இருப்பினும், 2004 இல் OPS ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு NPS செயல்படுத்தப்பட்டது.
UPS: புதிய முறை NPS மற்றும் OPS இலிருந்து எவ்வாறு வேறுபாட்டுள்ளது
பழைய ஓய்வூதிய முறை (OPS) மற்றும் தேசிய ஓய்வூதிய முறை (NPS) இரண்டின் முக்கிய சிக்கல்களையும் மனதில் கொண்டு UPS வடிவமைக்கப்பட்டுள்ளது. NPS-ல், பணியாளரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் கழிக்கப்படுகிறது. UPS பணி ஓய்வு காலத்தில், ஒரு நிலையான ஓய்வூதியத்திற்கான உத்தரவாதத்தை அளிக்கின்றது. ஆனால், NPS-ல் இது வருடாந்திர தொகை, அதாவது ஆனுவிட்டியைப் பொறுத்தது.
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகும், அடிப்படை சம்பளம் அதிரடியாய் உயரும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ