ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என்றால் பொய் வழக்கு ரத்து - அதிமுக சரமாரி கேள்வி!

பொதுமக்கள் உரிமை நிலை நாட்ட அரசின் கவனத்திற்கு கொண்டு வர அமைதியான முறையிலே சிறு தூசு கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் போராட்டங்கள் நடந்தினால் வழக்கை தொடுப்பது என்பது எந்த வகையிலே நியாயம்?  அதிமுக ஆர்.பி.உதயகுமார் கேள்வி.

Written by - RK Spark | Last Updated : Jan 27, 2025, 04:17 PM IST
  • உரிமைக்காக போராடினால் வழக்கு.
  • எங்கே இருக்கிறது ஜனநாயகம்?
  • அதிமுக ஆர்.பி.உதயகுமார் கேள்வி.
ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என்றால் பொய் வழக்கு ரத்து - அதிமுக சரமாரி கேள்வி! title=

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், கருணாநிதி போல நானும் ஒரு கம்யூனிஸ்ட் என்று ஸ்டாலின் பலமுறை பேசி வருகிறார். ஆனால் மக்கள் உரிமைக்காக  போராடினால் அனைத்து தலைவர்கள் மீது தொடர்ந்து வழக்கு தொடுத்து வருகிறார். இது குறித்து பலமுறை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சட்டமன்றத்தில், எதிர்க்கட்சிகள் குரல்வலையை, ஜனநாயகத்தின் உரிமையை பறிக்கப்படுகிறது என பதிவு செய்துள்ளார். மேலும் பொதுமக்கள் உரிமை நிலை நாட்ட அரசின் கவனத்திற்கு கொண்டு வர அமைதியான முறையிலே சிறு தூசு கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் போராட்டங்கள் நடந்தினால் வழக்கை தொடுப்பது என்பது எந்த வகையிலே நியாயம்? என்றுதான் இன்றைய கேள்வியாக இருக்கிறது.

மேலும் படிங்க: சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம்: "என் கல்யாணமே நின்றுவிட்டது".. கதறும் நபர்!

இன்றைக்கு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் பிறந்தநாள் விழாவின் நலத்திட்டங்களை வழங்க முடியவில்லை அந்த அளவிற்கு காவல் துறை காட்டுதார் செய்கிறது. டங்ஸ்டன் விவசாயிகள் யாருக்காக போராடினார்கள் தங்கள் பிறந்து வளர்ந்த தாய் மண்ணை காப்பதற்காக, அகதிகளாக போய் விடுமோ என்று அச்சத்தோடு, அவர்கள் நடத்திய அந்த அமைதி வழி போராட்டத்திற்கு இந்த அரசு எப்படி கையாண்டது என்பதை ஊடகங்களிலே இந்த தமிழ்நாட்டு மக்கள் பார்த்தார்கள், அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதை அறிந்த எடப்பாடியார் போடப்பட்ட வழக்குகளை நீங்கள் உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் உரிமைக்குரல் எழுப்பினார்.

தற்போது மேலூரில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா 3 மணிக்கு நடைபெறுகிறது. 1 மணி அளவில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து என்ற அரசாணை வெளியிடப்படுகிறது. அப்படியானால் ஒவ்வொரு முறையும் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தினால் வழக்கை வாபஸ் வாங்க முடியுமா? இது எந்த வகையில் நியாயம்? இதேபோன்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, மக்கள் உரிமை போராட்டத்திற்காக நடத்தப்பட்ட அந்த போராட்டங்களிலே பங்கேற்ற பொதுமக்கள் மீது, எதிர்க்கட்சி தலைவர்கள் மீது, எதிர்க்கட்சியின் நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ் வாங்குவதற்கு  ஸ்டாலின் முன் வருவாரா? அல்லது பாராட்டு விழா நடத்துவது என்கிற ஒரு நிலை வந்தால் தான் அந்த வழக்குகளை வாபஸ் வாங்குவாரா?

விலைவாசி உயர்வுக்கு போராட்டம், மின்சார கட்டண உயர்வு போராட்டம், சொத்து வரி உயர்வு ரத்து செய்ய வேண்டும் என்கிற போராட்டம், குப்பை வரி உயர்வு ரத்து செய்ய வேண்டும் என்கிற போராட்டம், சட்டம் ஒழுங்கு காப்பாற்ற வேண்டும் என்ற போராட்டம், பாலியல் வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும் என்கிற போராட்டம், போதைப்பொருள் நடமாடத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற போராட்டம் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் தர வேண்டும் என்கிற அந்தப் போராட்டம், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற அந்த போராட்டம், இப்படி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் தங்கள் உரிமை நிலைநாட்டு போராடுகிற போது அவர்கள் மீது போடப்பட்ட  அந்த வழக்குகள் எல்லாம் வாபஸ் வாங்குவதற்கு  வழக்குகளை எல்லாம் ரத்து செய்வதற்கு முத்துவேல் கருணாநிதி  ஸ்டாலின் சிந்திப்பாரா?

கருணாநிதியை போல கம்யூனிஸ்டை நான் கடைபிடிக்கிறேன் என்று ஸ்டாலின் பெருமையாக பேசிக்கொள்கிறார், ஆனால் அந்த கம்யூனிஸினுடைய தலைவர்களே எங்கள் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை, தமிழ்நாட்டிலே மினி எமர்ஜென்சி நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். .உங்கள் ஆட்சி அமைய வேண்டும் என்று மக்களை சந்தித்து வாக்குகளை கேட்ட அந்த தோழமைக் கட்சிகளுக்கே இந்த நிலைமை என்றால்   இது எவ்வளவு பெரிய அதிர்வலைகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்திருக்கிறது. மக்கள் உரிமைக்காக போராடிய இயக்கங்கள் ,கட்சிகள் எல்லாவற்றையும் அந்த போராட்ட களத்தை மக்களுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு நீங்கள் இரும்புத்திரை போட்டு இன்றைக்கு மூடிவிடலாம் என்று கனவு காண்கிறீர்கள், மக்கள் உரிமைப் போராட்டம் காற்றிலே கூட கலந்து சென்று மக்களிடத்திலே சேர்ந்து விடும்.

ஆகவே இந்த வழக்கு ரத்து செய்து இருப்பது  எடப்பாடியாருக்கு அவர்களுக்கு கிடைத்த வெற்றி ,இந்த மண்ணின் மைந்தர்களுக்கு கிடைத்த வெற்றி ,விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. இந்த பகுதி மக்களுக்கு கிடைத்த வெற்றி ஆகவே தானும் ஒரு கம்யூனிஸ்ட் என்று வாய் பேசிக் கொள்கிற ஸ்டாலின் அவர்களே, உண்மையிலேய சித்தாந்தத்திற்கு உங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் கருத்து சுதந்திரத்திற்கு பச்சை கொடி காட்ட முன் வரவேண்டும்.  மக்கள் போராட்டத்தில் போடப்பட்ட பொய் வழக்குகள் எல்லாம் ரத்து செய்ய முன் வரவேண்டும்  மக்கள் உரிமைக்காக போராடினால் பொய் வழக்கு பாய்கிறது,ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என்றால் பொய் வழக்கு ரத்தாகிறது,எங்கே இருக்கிறது ஜனநாயகம் என கூறினார்.

மேலும் படிங்க: மருதமலை திரைப்பட பாணியில் சம்பவம் செய்த பெண்.. திடுக்கிடும் புகார்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News