Jasprit Bumrah Injury Update: அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கான எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் முடிவடைந்தது. இத்தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஆனால் ஓரளவுக்கு இந்திய அணி போராட காரணம் இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான். ஆனால் இத்தொடரின் முடிவில் அவர் காயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்படவில்லை. அதேநேரத்தில் சம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்று இருக்கிறார். அதனால் அவர் ஓய்வு எடுத்து சாம்பியன்ஸ் டிராபிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரராகவே அர்ஷதீப் சிங் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து இருந்தார். ஆனால் ஜஸ்பிரித் பும்ரா காயம் குறித்து தங்களுக்கு வெளிப்படையாக எதுவும் தெரியாது என அவர் கூறியிருந்தார்.
மேலும் படிங்க: போலி பாதாமை எப்படி கண்டுபிடிப்பது?
வெளியான தகவல்
இந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா கொடுக்கப்பட்டுள்ள நேரத்தில் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வந்தால் அது அதிசயம் என பிசிசிஐ தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது பிசிசிஐ மருத்துவக் குழு நியூசிலாந்து ஸ்கவுட்டன் உடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், பும்ராவை நியூசிலாந்துக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் அது பாதியில் நிற்கிறது எனவும் கொடுக்கப்பட்ட நேரத்தில் அவர் முழுமையாக காயத்தில் இருந்து மீண்டு உடல் தகுதியுடன் இருந்தால் அது அதிசயம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோல், தற்போது அவர் காயத்தின் நிலைமை குறித்து நியூசிலாந்தில் இருக்கும் மருத்துவக் குழுவுடன் பகிர்ந்து கொள்ளப்படும். நியூசிலாந்துக்கு தேவைப்பட்டால் மட்டுமே அனுப்பப்படுவார். இந்திய அணி அவர் நீண்ட காலத்திற்கு தேவை என்பதால் அவரை அவசரமாக விளையாட வைக்க நினைக்கவில்லை. அவர் முழு தகுதியுடன் இருந்தால் மட்டுமே அவர் விளையாட தொடங்குவார். மேலும் இந்திய தேர்வாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா விஷயத்தில் ஒரு மாற்று திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விகீ), ரிஷப் பந்த் (விகீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா*, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
மேலும் படிங்க: மருதமலை திரைப்பட பாணியில் சம்பவம் செய்த பெண்.. திடுக்கிடும் புகார்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ