இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்தது. இதில் படுமோசமாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
Virat Kohli working with Sanjay Banger in Mumbai. pic.twitter.com/T4zEhC2D2f
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 25, 2025
இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் அணி வீரர்கள் யாராக இருந்தாலும் போட்டிகளில் சரியான பங்களிப்பு இல்லாத பட்சத்தில் அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தங்களது ஃபார்மை மீட்டெடுக்க வேண்டும், வெளிநாடுகளுக்கு சென்று விளையாடும் போது வீரர்கள் அனைவரும் ஒரே பேருந்து மற்றும் விமானங்களில் தான் பயணிக்க வேண்டும் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளை வீரர்களுக்கு விதித்தது.
விராட் கோலி காயம்
இந்த நிலையில்தான், ரோஹித் சர்மா, சுப்மன் கில், யஸ்ஷவி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் தற்போது நடந்து வரும் ரஞ்சி கோப்பையின் இரண்டாம் கட்ட போட்டிகளில் விளையாடி வருகின்றனர். ஆனால் விராட் கோலிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்ட காரணமாக அவர் ரஞ்சிக் கோப்பையில் தற்போது வரை பங்கேற்கவில்லை.
அவர் ரஞ்சி விளையாடுவாரா? மாட்டாரா? அவர் ரஞ்சி கோப்பையில் விளையாடாத பட்சத்தில் அவர் மீது பிசிசிஐ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமா உள்ளிட்ட பல கேள்விகள் ரசிகர்கள் உலாவி கொண்டிருந்தது.
மேலும் படிங்க: பாதாம் பிசின் சாப்பிட்டால் இவ்வளவு நல்லாதா? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
பயிற்சி மேற்கொள்ளும் கோலி
இந்த நிலையில், அவர் மும்பையில் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கருடன் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எனவே அவர் ரஞ்சியில் விளையாடதான் பயிற்சி மேற்கொண்டு வராரா என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவர் பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். மேலும், கோலி ரஞ்சியில் விளையாடுவாரா எனக் காத்திருக்கின்றனர்.
விராட் கோலி சாதனையை தகர்த்த திலக் வர்மா
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் திலக் வர்மா 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 55 பந்துகளில் 72 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
இதன் மூலம் தொடர்ச்சியாக 4 டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்தார். கடைசி 4 இன்னிங்ஸில் 318 ரன்கள் குவித்துள்ளார். முன்னதாக விராட் கோலி தொடர்ச்சியாக 4 டி20 இன்னிங்ஸில் 258 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திலக் வர்மா இந்த சாதனையை தகர்த்துள்ளார்.
ரஞ்சியிலும் மோசமாக விளையாடும் நட்சத்திர வீரர்கள்
இந்திய அணியில் படுமோசமாக விளையாடியதன் காரணமாக தான் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தங்களது ஃபார்மை மீட்டெடுக்க ரஞ்சிக்கு சென்றனர். ஆனால் அங்கும் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீருக்கு எதிராக ரோகித் சர்மா, யஸ்ஷவி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஒற்றை இலக்கு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இருவரும் முறையே 28, 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதேபோல் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்டும் கடுமையாக சொதப்பினர். இந்த சூழலில் வர இருக்கும் போட்டிகளில் நட்சத்திர வீரர்களான இவர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுப்பார்களா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் படிங்க: அஜித் குமாருக்கு முன் பத்ம பூஷன் விருது வென்ற தமிழ் நடிகர்கள் யார் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ