Health Tips Tamil | இப்போதெல்லாம் இதய நோய், சர்க்கரை நோய் குடும்பத்தில் ஒருவருக்கு வருவது சர்வ சாதாரணமாகிவிட்டது. சில நேரங்களில் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட திடீரென மாரடைப்பு, இதயத்தில் ரத்த குழாய் அடைப்பு உள்ளிட்ட கொடூரமான பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம் என அலசி ஆராய்ந்தால், அவர்களிடம் இருக்கும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையே பிரதானமான காரணமாக இருக்கிறது. குறிப்பாக இரவு நேர பழக்க வழக்கங்கள் அன்றாட உடல் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன. அதனை நம்மில் பலரும் உணர்ந்திருப்பதில்லை. அதனுடைய விபரீதம் குறித்து அறிந்து கொள்வதும் இல்லை.
அதனால் இரவு நேரத்தில் என்ன பழக்க வழக்கங்களை எல்லாம் விட வேண்டும்? எதனை எல்லாம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை இருப்பவர்களாக இருந்தால் இந்த விஷயங்களை நீங்களும் செய்கிறீர்கள் என்றால் உடனடியாக நிறுத்திவிடுங்கள். இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட மோசமான உயிர் கொல்லி நோய்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பாக விலகி இருக்கலாம்.
இரவில் செய்யக்கூடாத அன்றாட வாழ்க்கை முறை தவறுகள்
1. உணவு
இரவு நேரத்தில் தான் கடினமான உணவுகளை உண்பதை பலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். குறிப்பாக நகர வாழ்க்கையில் இருப்பவர்கள் மிட்நைட்டில் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு நாள் என்றால் பரவாயில்லை. தினம்தோறும் இப்படியான உணவு பழக்கத்தை கடைபிடிப்பவர் என்றால் நிச்சயம் உங்கள் செரிமான அமைப்பு மிக மோசமடையும். குடல் ஆரோக்கியம் கெட்டுவிடும். வாயு, அமிலத்தன்மை மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் எட்டி பார்க்கும். இதன் தொடர்ச்சி மற்ற நோய்களையும் வரவழைக்கும். அதனால் தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கும் முன்பாக சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
2. மொபைல் பார்த்தல்
இப்போது எல்லோரது வீடுகளிலும் குறைந்தது மூன்று மொபைல்களாவது இருக்கும் சூழல் உருவாகிவிட்டது. எல்லோரும் இரவு நேரங்களில் வீடு திரும்பியவுடன் மொபைல் பார்ப்பதை வழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனால் தூக்கம் என்பதை மறந்துவிடுகின்றனர். இரவு ஒருமணி இரண்டு மணி வரைகூட தூங்காமல் மொபைலை பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனால் தூக்கம் முறை மாறி நாட்பட்ட அளவில் ஹார்மோன் சுரப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
3. காபி அல்லது மது அருந்ததுதல்
இரவு நேரத்தில் காபி குடிப்பது உங்கள் தூக்கம் முறையை கட்டாயம் பாழ்படுத்தும். சரியான நேரத்தில் நீங்கள் தூங்க முடியாது. காபி குடித்துவிட்டு படுத்தால்கூட தூக்கம் வராது. அதேபோல் மது அருந்ததுவதும் சிக்கலான ஒன்றே. இரவு நேரத்தில் மது அருந்துவது நரம்பு மண்டலத்தை தூண்டி தூக்கமின்மையை ஏற்படுத்தும். நீங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் குடும்பத்தினரும் உங்களால் அவதிப்படுவார்கள். நாளடைவில் இதுவே ஒரு பிரச்சனையாக மாறிவிடும்.
4. எதிர்மறை சிந்தனை
தூங்குவதற்கு முன் எதிர்மறையான சிந்தனை மற்றும் அதிக கவலை மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. இது மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மையை ஏற்படுத்தும். எப்போதும் இரவு நேரத்தில் மனம் அமைதியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எப்பேர்பட்ட விஷயமாக இருந்தாலும் அதனை ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு தூங்க செல்லுங்கள். காலையில் புது மனிதனாக எழுந்து அன்றைய நாளை தொடங்கவும். நேர்மறை சிந்தனை மட்டுமே உங்களை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்.
5. படுக்கைக்கு செல்லுதல்
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை குறித்து வைத்து அந்த நேரத்தில் தூங்குவதை வழக்கமாக்க வேண்டும். ஆனால் அப்படி செய்கிறோமா என்றால் இல்லை. ஒழங்கற்ற தூக்க நேரங்கள் இன்சுலின் சுரப்பில் மாற்றத்தை உண்டாக்க வழிவகுக்கும். இதனால் இதய நோய், சர்க்கரை உள்ளிட்ட கடுமையான நீரிழிவு நோய்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். எனவே, தினமும் சரியான நேரத்தை தூங்க செல்வதை வழக்கமாக்கவும்.
இரவு நேரத்தில் செய்ய வேண்டிய ஆரோக்கியமான விஷயங்கள்
* படுக்கைக்கு செல்லும் முன் குறைந்தது 2 அல்லது 3 மணி நேரத்துக்கு முன்னால் சாப்பிடவும், லேசான உணவுகளை சாப்பிடவும்
* செல்போன் பார்ப்பதை கட்டாயம் தவிர்த்து விடுங்கள். படம் பார்ப்பதை கூட இரவு நேரத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம்.
* டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் வேண்டாம்
* எப்போதும் நேர்மறையாக சிந்திப்பதை பழக்கமாக வைத்துக் கொள்ளவும். பாசிடிவ் எண்ணங்கள் உங்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் வீட்டு வைத்தியங்கள் மற்றும் பொதுவான கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டது ஆகும். இதனை நீங்கள் பின்பற்றும் முன்னர் உரிய மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | இந்த 2 பொருட்களை மஞ்சள் நீரில் கலந்து குடித்தால் கொழுப்பு எல்லாம் கரைந்துவிடும்
மேலும் படிக்க | ஆண்மை பிரச்சனை முதல் மூளை ஆற்றல் வரை... வியக்க வைக்கும் அஸ்வகந்தா என்னும் மூலிகை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ