Govt Pensioners Latest News: தமிழக அரசு முன்னாள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.
Pensioners Life Certificate News: ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
தமிழக அரசு முன்னாள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது சார்ந்த விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஓய்வூதியம் பெறும் நபர்கள் ஆண்டுதோறும் தங்கள் வாழ்க்கை சான்றிதழை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
இந்த ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் ஓய்வூதிதாரர் உயிருடன் உள்ளார் என்பதையும், இதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதும் உறுதிப் படுத்தப்படுகிறது.
இ-சேவை மையம் மூலம் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்குமாறு ஓய்வூதியதாரர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஓய்வூதிய விதிகளின் படி, கடந்த 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர் ஒவ்வொரு வரும் ஆயுள் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் சமர்ப்பிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டு உள்ளது.
அவர்கள் மூத்த குடிமக்கள் என்பதால் ஆயுள் சான்றிதழை அரசு கட்டுப்பாட்டின் கீழ் அந்தந்த பகுதியில் உள்ள இ-சேவை மையத்தில் சமர்ப்பிக்கலாம் என்று ஓய்வூதிய நிதி பொறுப்பாட்சி அறக்கட்டளை அறிவித்துள்ளது.
எனவே 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 தேதிக்குள் ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றிதழை இ-சேவை மையத்திலோ அல்லது பணிமனைகளில் நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம்.
இ-சேவை மையத்தில் சமர்ப்பிக்கும் போது, ஓய்வூதிய ஆணை படிவம், புகைப்படம், வங்கி புத்தகம், ஆதார் அட்டை, செல்போன் எண் ஆகியவற்றை உடனே எடுத்து செல்ல வேண்டும். பின்னர் டிஎன்எஸ் 103 இணைய வகுப்பில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.