FAST45 - ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்...

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக, ஒரு நிமிட வாசிப்பிற்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

Written by - | Last Updated : Dec 26, 2019, 08:53 AM IST
FAST45 - ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்... title=

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக, ஒரு நிமிட வாசிப்பிற்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

  • சச்சின் டெண்டுல்கரின் எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வாபஸ்... உத்தவ் தாக்கரே அரசு திடீர் முடிவு...
  • உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு... முன்னர் ஒய் பிளஸ் பிரிவு அளிக்கப்பட்டிருந்தது...
  • வாஜ்பாய் பிறந்த தினத்தையொட்டி மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் உருவப்படத் திறப்பு விழா...
  • மாநில அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை...மம்தா புறக்கணிப்பால் ஆளுநர் ஜெகதீப் தன்கர்  வேதனை...
  • குன்னூர் பூங்காவில் குளிரை ரசித்த இலங்கை 'மாஜி' பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கே... குடும்பத்துடன் ஊட்டியில் இன்பச்சுற்றுலா...
  • ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 81 எம்.எல்.ஏ.,க்களில் 41 பேர் குற்ற வழக்கு பின்னணி கொண்டவர்கள்...   ஜே.எம்.எம்., மின், 30 எம்.எல்.ஏ.,க்களில், 17 பேர்... காங்கிரசின், 16 எம்.எல்.ஏ.,க்களில் 8 பேர்... பா.ஜ.க. வின் 25 எம்.எல்.ஏ.,க்களில் 11பேர் அடங்குவர்...
  • தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்... வழக்குப் பதிவு செய்து வேட்பாளர் ஜெயராமனை போலீஸார் கைது
  • பண்டிகளை முன்னிட்டு நெல்லை-தாம்பரம் இடையே சுவிதா சிறப்பு ரயில் ஜனவரி 5 ம் தேதி மாலை 6.15 மணிக்கு இயக்கப்படுகிறது...
  • சென்னை எழும்பூர்- நெல்லை இடையே ஜனவரி 3 ம் தேதி மாலை 6.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
  • வேளாங்கன்னி- எர்ணாகுளம் இடையே ஜனவரி , 12,19,26 பிப்., 2,9,16,23 மார்ச்1,8,15,22,29 ஆகிய தேதிகளில் மாலை 6.15 மணிக்கு இயக்கப்படும்.
  • எர்ணாகுளம்-வேளாங்கன்னி இடையே ஜன.,4,11,18,25 பிப்.,1,8,15,22,29, மார்ச் 7,14,21,28 தேதிகளில் காலை 11 மணிக்கு இயக்கப்படும்.
  • குடியுரிமை சட்டத்துக்கு எதிரான புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் போராட்டம் திடீர் ஒத்திவைப்பு... வியாபாரிகள் கேட்டுக் கொண்டதால் மாற்றம்
  • கர்நாடகத்தின் மங்களூரில் மத்திய அரசுக்கு எதிரான போராட்ட கலவரத்தில் பலியானவர் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க முதல்வர் எடியூரப்பா மறுப்பு... சிறப்பு விசாரணைக்குப் பிறகே முடிவு என அறிவிப்பு...
  • தமிழகத்தில் உள்ளாட்சி வெற்றிக்காக காத்திருக்கிறோம்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • நாட்டில் திருநங்கைகளுக்கான முதல் பல்கலைக்கழகம்... உத்தரப்பிரதேசத்தில் உருவாகிறது...
  • திருச்சியில் மோடிக்கு கோயில் கட்டி வழிபடும் பாஜக தொண்டர்... துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்த விவசாயி சங்கரின் மோடி பற்றுக்கு குவிகிறது பாராட்டு...
  • உத்தரப்பிரதேசத்தின் சத்தார்பூரில் போலீஸாருக்கு பயந்து குளத்தில் குதித்த 2 சூதாடிகளில் ஒருவர் நீரில் மூழ்கி பலி… 
  • நிவாரியில் எதிர்ப்புகளுக்கு இடையே சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் அகற்றம்… 7 வீடுகள் தரைமட்டம்… சிவபுரியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
  • சத்தீஸ்கரில் உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்ததாக மாநில அரசு மீது முன்னாள் முதல்வர் ராமன்சிங் குற்றச்சாட்டு… சதி்க்கு நடுவே வெற்றிகளை குவித்ததாக பேச்சு...
  • சத்தீஸ்கரில் உணவு உற்பத்தி அமோகம்… 2016-17 ஆம் ஆண்டுக்கான கிருஷி கர்மான் விருதுக்கு தேர்வு
  • குடியரசு தின பேரணியில் சத்தீஸ்கர் கலை மற்றும் கைவினை அலங்கார ஊர்திக்கு இடம்… மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தேர்வு
  • மத்தியப்பிரதேசத்தில் அடுத்த 24 மணிநேரத்துக்கு கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
  • பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக இந்தூர் தனியார் நிறுவனத்தில் சிறப்பு விசாரணைக்குழு திடீர் சோதனை… செபி விதிகளை மீறியதாக 47 ஊழியர்களிடம் குடைச்சல்...
  • மத்தியப்பிரதேசத்தில் குற்றங்கள் அதிகரிப்பு… ரெய்சினில் ஒரு குடும்பத்தாரை பணயக்கைதிகளாக துப்பாக்கி முனையில் மிரட்டி 20 லட்சம் ரூபாய் பறிப்பு... 
  • அடல் பிறந்தநாளை முன்னிட்டு புதிய அடல் நிலத்தடி நீர்த்திட்டம், ரோத்தங் கணவாயில் அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி தொடக்கம்
  • குவாலியரில் 60 டன் வெங்காயம் திருடிய இருவர் கைது… வெங்காயத்தை மீட்க முடியாமல் போலீஸ் தவிப்பு
  • ஜெய்ப்பூரில் குடியுரிமை சட்டத்துக்கு அமோக ஆதரவு… மூவர்ணக்கொடியுடன் மோடி அரசை பாராட்டி மக்கள் பேரணி
  • ராஜஸ்தானின் சித்தோர்கரில் மருத்துவ முகாமை முதல்வர் கெல்லாட் தொடக்கம்… பணிகளை அமைச்சர் உதய்லால் அஞ்சனா ஆய்வு
  • காங்கிரஸ் தலைவர் நாராயண் சிங் குடும்ப நிகழ்ச்சியில் முதல்வர் கெல்லாட் பங்கேற்பு… சிட்வா தனியார் மருத்துவமனையில் புதிய சேவையை தொடக்கம்
  • ராஜஸ்தானில் வேலையற்றவர்களுக்கு வாய்ப்பு… அடுத்த நான்கு மாதங்களில் 50 ஆயிரம் பேருக்கு வேலை தருவதாக முதல்வர் கெல்லாட் அறிவிப்பு
  • ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு மீது பாஜக தலைவர் சதீஸ் பூனியா குற்றச்சாட்டு… பாகிஸ்தானிய அகதிகளை மேம்படுத்துவதாக வாக்குறுதி தந்துவிட்டு அதற்கு எதிராக செயல்படுவதாக புகார்
  • ராஜஸ்தானின் கோட்டாவில் தான்குபேர் மீனா வழக்கில் புதிய துப்பு… பல நிறுவனங்கள் தொழில்சாலைகளில் உரிமம்… பிஜோலாவில் 17 பிகா நிலம் இருப்பதாக அம்பலம்…
  • ஜோத்பூரின் சிமான கிராமத்தில் துப்பாக்கிச்சூடு… கிராமத்தலைவர் உறவினர்கள் மீது கிராமத்தினர் குற்றச்சாட்டு
  • 1200 அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது வழக்கு… தடையுத்தரவை மீறியதாக குற்றச்சாட்டு
  • ஜனவரியில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி கங்கை நதியோரம் ஆய்வு… லக்னௌவில் அதிகாரிகளுடன் அமைச்சர் மகேந்திர சிங் முன்னேற்பாடுகள்...
  • உத்தரப்பிரதேசத்தின் மெயின்பூரில் வெங்காயம் திருடிய ஹோம்கார்டுகள்… சிசிடிவி கேமராவில் பதிவு
  • உத்தரப்பிரதேசத்தில் வன்முறை தொடர்பாக அரசு நடவடிக்கை… மீரட்டில் சொத்துக்களை நாசப்படுத்தியதாக 665 பேர் மீது யோகி அரசு நோட்டீஸ்… லக்னௌவில் மீண்டும் இன்டர்நெட் சேவை 
  • அயோத்தியில் பயங்கரவாத தாக்குதல் அபாயம்… ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாதிகள் சதி தகவலால் உஷார்நிலை
  • உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூரில் திருடர்களை கட்டிவைத்து கும்பல் தாக்கியதால் பரபரப்பு
  • ராஜஸ்தானிலிருந்து சுற்றுலா சென்ற பள்ளிப்பேருந்து நைனிடாலில் விபத்து… 9 குழந்தைகள், ஒரு ஆசிரியர் படுகாயம்
  • தில்லியில் சோனியா, ராகுலுடன் ஹேமந்த் சோரன் சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு வர அழைப்பு… பிரதமருக்கும்  அழைப்பிதழ்
  • ஜார்க்கண்ட்டை தொடர்ந்து தில்லியில் தேர்தல் களம் காண ஆர்ஜேடி ஆயத்தம்… வேட்பாளர்களை நிறுத்த லாலு முடிவு
  • சிஏஏ-என்ஆர்சிக்கு எதிராக விழிப்புணர்வு யாத்திரைக்கு மாஜி மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா ஏற்பாடு… சாம்பரனிலிருந்து தொடக்கம்...
  • இன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்… காலை 8:21க்கு தொடங்கி நண்பகல் 11:13க்கு முடிவு

Trending News