மீனத்தில் ஒன்றுசேரும் 6 கிரகங்கள்... இந்த 5 ராசிகளுக்கு அடிக்கப் போகும் பெரிய லக்

6 Planets In Pisces: வரும் மார்ச் மாதம் 6 கிரகங்கள் மீனத்தில் சஞ்சரிக்க இருப்பதால், இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது.

ராகு, சுக்கிரன், புதன், சூரியன், சனி பகவான் ஆகிய கிரகங்கள் மீன ராசியில் சஞ்சரிக்கின்றன. இது அற்புதமான வானியல் நிகழ்வாக கருதப்படுகிறது.

1 /9

ஜோதிடத்தின்படி, வரும் மார்ச் மாதத்தில் அற்புதமான வானியல் நிகழ்வு நடைபெற இருக்கிறது. அதாவது மீன ராசியில் 6 கிரகங்கள் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. 

2 /9

மீனத்தில் ஏற்கெனவே ராகு மற்றும் சுக்கிரன் பகவான் இருக்கின்றனர். பிப்ரவரி மாதத்தில் புதன் கிரகம் மீனத்தில் பெயர்ச்சி ஆக இருக்கிறார். இதையடுத்து, மார்ச் 14ஆம் தேதி சூரிய பகவானும், மார்ச் 28ஆம் தேதி சந்திரனும், மார்ச் 29ஆம் தேதி சனி பகவானும் மீனத்தில் சஞ்சரிக்க உள்ளன.  

3 /9

அதாவது, மார்ச் 29ஆம் தேதி அன்று மொத்தம் 6 கிரகங்கள் மீனத்தில் சஞ்சரிக்க இருப்பதால் சுபமான மற்றும் அசுபமான யோகங்கள் உருவாகும். இந்நிலையில், மீனத்தில் 6 கிரகங்கள் இணைவதால் மார்ச் 29ஆம் தேதி இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரர்கள் ஆவார்கள். அவர்களுக்கான பலன்களை இங்கு காணலாம்.

4 /9

கும்பம்: மார்ச் மாதத்தில் இந்த அற்புதமான வானியல் நிகழ்வால் பணம் உங்களுக்கு அனைத்து பக்கங்களில் இருந்தும் வரும். இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகள் குறையும், திருமணமானவர்களுக்கு நல்ல செய்தி வரும். பணியில் இருப்பவர்களுக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது. பெரிய வாய்ப்புகள் உண்டாகும்.  

5 /9

மகரம்: தொழிலில் பெரியளவில் வெற்றி கிடைக்கும். இருப்பினும், அதீத ஆசைகளை கைவிடுங்கள். முதலாளி உங்களின் வேலையை பார்த்து உங்களை பாராட்டித் தள்ளுவார். எனவே, வேலை சார்ந்த பெரிய நல்ல செய்தி உங்களுக்கு காத்திருக்கிறது.   

6 /9

கன்னி: இந்த காலகட்டம் சவாலாக இருக்கும் என்றாலும் பெரும்பாலும் நன்மையே வரும். விளையாட்டு வீரர்களுக்கு நல்ல செய்தி வரும். இந்த காலகட்டத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். இருப்பினும் உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் வரலாம்.

7 /9

மிதுனம்: 6 கிரகங்கள் இணையும் இந்த காலகட்டம் என்பது இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்வில் சிறப்பான தாக்கத்தை உண்டாகும். மனைவிமார்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இனிமையாக இருப்பார். பணியிடத்திலும் வளர்ச்சி இருக்கும்.   

8 /9

ரிஷபம்: இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நன்மை அதிகரிக்கும். அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். தனிப்பட்ட பிரச்னைகள் அனைத்தும் தீரும். எனவே, உங்களின் குறிக்கோள் மற்றும் சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். ஆன்மீக நாட்டமும் அதிகரிக்கும் காலகட்டமிது.  

9 /9

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.