ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) "உலக மக்கள்தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் அமைதி நிலவவும், பாதுகாப்பு ஏற்படவும் நம்பிக்கை தேவை என " என்று கூறினார்.
மாஸ்கோவில் நடந்த அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ பங்கே முன்னிலையில் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளில், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கும், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு, பிரச்சனைகளை தீர்ப்பதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும் . இந்தியாவும் சீனாவும் எஸ்சிஓ உறுப்பினர்களாக உள்ளன. இது எட்டு உறுப்பு நாடுகளைக் கொண்ட பிராந்திய அமைப்பாகும். இது முக்கியமாக பாதுகாப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது.
ALSO READ | “சீண்ட நினைத்தால் சிக்கிக் கொள்வீர்கள்” – பாகிஸ்தானை எச்சரித்த CDS பிபின் ராவத்!!
இந்திய மற்றும் சீனா இடையில் கிழக்கு லடாக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு படைகளு, எல்லையில் படைகளை குவித்து வருகின்றன.
கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ஜூன் மாதம் ஏற்பட்ட வன்முறை மோதலில், 20 வீரர்கள் இந்தியாவுக்காக தங்கள் உயிரைக் தியாகம் செய்து வீர மரணம் அடைந்தனர்.இதில் 40 க்கும் மேற்பட்ட சீன படையினர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என கூறப்படுகிறது. எனினும் சீனா இது தொடர்பான தக்வலை வெளியிடாமல் மறைத்து வருகிறது.
ஐந்து நாட்களுக்கு முன்பு பாங்கோங் ஏரியின் தெற்கு பகுதியில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிக்க முயன்றது. அதனை நமது படைகள் முறியடித்தன. இதை அடுத்து இப்பகுதியில் மேலும் பதற்றம் அதிகரித்தது.
இப்போது, ராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இந்தியா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
ALSO READ | இந்திய சீனா எல்லையில் நிலைமை ”தீவிரம்” : ராணுவ தலைவர் நராவனே
சீன எல்லைப் பகுதியான LAC-யில் சீனா செய்யும் அனைத்து சதிகளையும் முறியடிக்கும் திறன் இந்திய ஆயுதப்படைகளுக்கு உள்ளது என்று பாதுகாப்பு தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் பிபின் ராவத் வியாழக்கிழமை திட்ட வட்டமாக தெரிவித்தார்.
எல்லை பகுதியில் நிலைமை சற்று சற்று பதற்றமாக உள்ளது என்றும், நமது வீரர்கள் எதையும் சந்திக்கும் தயார் நிலையில் உள்ளார்கள் என்றும் ராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனேயும் இன்று காலை தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போரைக் குறிப்பிடுகையில், முட்டாள் தனமாக ஆக்கிரமிக்கும் ஒரு நாடு இறுதியில் அனைவருக்கும் "அழிவை" ஏற்படுத்துகிறது என்பதை அந்த யுத்தத்தின் நினைவுகள் நமக்கு உணர்த்துகின்றன என ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
"இந்த ஆண்டு இரண்டாம் உலகப் போரின் முடிவின் 75 வது ஆண்டு நிறைவையும், ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றத்தையும் குறிக்கிறது. இது அமைதியான உலகத்தின் அவசியத்தை உணர்த்துகிறது. உலகில் சர்வதேச சட்டங்களும் நாடுகளின் இறையாண்மையும் மதிக்கப்படுகின்றன. மேலும் நாடுகள் ஒருதலைப்பட்ச மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பில் ஈடுபடக்கூடாது என்பதை உணர்த்துகின்றன," திரு சிங் கூறினார்.
ALSO READ | PUBG தடை: இரண்டே நாளில் 2.5 லட்சம் கோடியை இழந்த டான்செண்ட் நிறுவனம்