Supreme Court On Article 370: சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என்றும் செப்டம்பர் மாதத்திற்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் வழங்கியுள்ளது.
லடாக்கில் திபெத்திய காட்டுக் கழுதைகளை சுற்றுலாப்பயணிகள் காரில் துரத்தி விரட்டியடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
Aurora Dazzles In Ladakh Sky: புவி காந்தப் புயல் பூமியைத் தாக்கிய பிறகு லடாக் வானில் துருவ ஒளி தோன்றியது. இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA), இந்த நிகழ்வை ஏப்ரல் 22-23 இரவு 360 டிகிரி கேமராவில் படம்பிடித்துள்ளது.
லடாக் எல்லைப் பிரச்சனைக்கு இடையே இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தியா, சீனா இடையே எல்லை மோதல் ஏற்பட்டப் பிறகு இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் நேரில் சந்திந்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.
கோக்ராவில் (Gogra Point) உள்ள எல்லை பகுதிகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் முழுமையாக கடைபிடிக்கப்படும் என இரு தரப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய இராணுவம் கூறியது.
இந்தியா மற்றும் சீனா இடையேயான உயர்மட்ட தளபதிகள் அளவிலான 12வது சுற்று பேச்சுவார்த்தை சனிக்கிழமை லடாக் (Ladakh) பகுதியில் சீன பக்கம் உள்ள மோல்டோவில் நடந்து வருகிறது.
10 ஜவான்கள் தங்கும் அளவுக்கு சிறிய கூடாரம் இந்திய ராணுவத்திற்காக உருவாக்கப்படுகிறது. சூரிய மின்சக்தியால் வெப்பமூட்டப்படும் உலகின் முதல் டெண்ட் என்பது இதன் சிறப்பம்சம். கூடாரத்தின் எடை 30 கிலோவிற்கும் குறைவு. அதோடு, ஒரு நாளுக்குள் முழுமையாக உருவாக்கிவிடலாம் என்பதும் இதன் சிறப்பம்சம்.
செயற்கைக்கோள் படங்கள், கண்காணிப்பு கருவிகள் நெட்வொர்க் கருவிகளை ஆகியவற்றின் உதவியுடன் சீன படையின் ஒவ்வொரு அசைவையும் இந்தியா தீவிரமாக கவனித்து வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் ஆண்டு ஜம்மு- காஷ்மீர் (Jammu kashmir) மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது மத்திய அரசு. அதாவது சட்ட பிரிவு 370 நீக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
தினசரி வேலைகளை செய்வதே பெரும் சவாலாக இருக்கும் கடும் குளிர் மற்றும் அசாதாரண சூழலிலும் வீரர்கள் கொடியுடன் அணிவகுத்துச் சென்றது, அவர்களின் நாட்டுப்பற்றுக்கு ஒரு அடையாளமாக இருந்தது.
சிக்கிமில் உள்ள எல்லை பகுதியில் சீன மேற்கொண்ட ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. அப்போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 20 பேர் காயமடைந்தனர்.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் அனைத்து வித நடவடிக்கைகளையும் இந்தியா தீவிரமாக கண்காணித்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.