ஐபிஎல் 2025 : தோனி சிஷ்யன் கொடுத்த சரவெடி அப்டேட் - பஞ்சாப் கிங்ஸ் செம ஹேப்பி

MS Dhoni | எம்எஸ் தோனி கொடுத்த கோல்டன் ஐடியா மட்டுமே என்னை பஞ்சாப் கிங்ஸ் அணியின் பினிஷராக உள்ளேன் என அவருடைய சிஷ்யன் ஷஷாங்க் சிங் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். அந்த ஐடியா என்ன என்றும் கூறியுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 27, 2025, 04:06 PM IST
  • சிறந்த பினிஷராக இருப்பது எப்படி?
  • தோனி கொடுத்த மிகப்பெரிய டிப்ஸ்
  • ஷஷாங்க் சிங் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
ஐபிஎல் 2025 : தோனி சிஷ்யன் கொடுத்த சரவெடி அப்டேட் - பஞ்சாப் கிங்ஸ் செம ஹேப்பி title=

MS Dhoni Advice | ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. மார்ச் இறுதியில் ஐபிஎல் 2025 தொடர் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இந்த முறையும் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனை மாற்றியுள்ளது. கேப்டனை மட்டுமல்ல பயிற்சியாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அணியையும் மாற்றியிருக்கிறது அந்த அணி. பழைய பிளேயர்களில் ஷஷாங்க் சிங் மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவர் மட்டுமே அந்த அணியில் உள்ளனர். அவர்களில் ஒருவரான ஷஷாங்க் சிங் எம்எஸ் தோனி கொடுத்த டிப்ஸ் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி மாற்றம்

ஐபிஎல் தொடர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் கோப்பைக்காக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டாவது தங்களின் கனவு நனவாக வேண்டும் என்ற நம்பிக்கையில் ஒட்டுமொத்த அணியையும் இரு அணிகளும் மாற்றியுள்ளன. குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி பயிற்சியாளர், கேப்டன் என எல்லோரையும் மாற்றியிருக்கிறது. பஞ்சாப் அணி பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங், கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஏற்கனவே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடி இருக்கிறார்கள். அதுவும் ஸ்ரேயாஸ் கடந்த முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தவர். அவர் பஞ்சாப் அணிக்கு வந்திருப்பது அந்த அணி நிர்வாகத்துக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

ஷஷாங்க் சிங் நம்பிக்கை

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி குறித்து அந்த அணியின் பினிஷர் ஷஷாங்க் சிங் ஓபனாக பேசியுள்ளார். இந்த பொறுப்பு தனக்கு கிடைப்பதற்கு எம்எஸ் தோனியே காரணம் என கூறிய அவர், ஒருமுறை தோனி தனக்கு கொடுத்த ஒரு சூப்பரான ஐடியா குறித்தும் தெரிவித்துள்ளார். ஒரு சிறந்த பினிஷராக இருக்க வேண்டும் என்றால் 10 போட்டிக்களில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்தாலே போதும், உன்னை உலகம் கொண்டாடும் என தோனி தெரிவித்ததாக ஷஷாங்க் சிங் கூறியுள்ளார். மேலும், எல்லா போட்டிகளிலும் நம்மால் வெற்றி பெற வைக்க முடியாது என்ற எதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என தோனி கூறியதாகவும், அந்த டிப்ஸ் கடந்த ஐபிஎல் போட்டியில் மிகப்பெரிய உதவியாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

ஷஷாங்க் சிங் நம்பிக்கை

" ஒருமுறை தோனி பாயை சந்தித்து பேசினேன். அப்போது பினிஷர் ரோல் குறித்து அவரிடம் கேட்டேன். அப்போது அவர் சொன்னார், 10 போட்டிகளில் 3 போட்டிகளை வெற்றி பெற்று கொடுத்தாலே உன்னை பினிஷராக இந்த கிரிக்கெட் உலகம் ஏற்றுக் கொள்ளும். அந்த மூன்று போட்டிகளில் வெல்ல நீ முயற்சி செய். அதேநேரத்தில் எல்லா போட்டிகளையும் வெற்றி பெற்று கொடுக்க முடியாது என்ற எதார்த்தத்தையும் புரிந்து கொள் என தோனி கூறினார்." என ஷஷாங் சிங் தெரிவித்துள்ளார். 

ஷஷாங் சிங் சிறப்பான ஆட்டம்

ஐபிஎல் 2024 இல் பஞ்சாப் அணிக்காக ஷஷாங்க் அற்புதமாக விளையாடினார். 33 வயதான இவர், கடந்த ஆண்டு 14 போட்டிகளில் 44.25 சராசரியாக 354 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு அரைசதங்களும் அடங்கும். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 29 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். அந்த போட்டிக்குப் பிறகு ஓவர்நைட்டில் பிரபலமானார் அவர். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை அதே ஆர்வத்தோடு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஷஷாங்க் சிங்.

மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபியில் முகமது சிராஜ் விளையாடுவார்! வெளியான லேட்டஸ்ட் தகவல்!

மேலும் படிக்க | இந்திய அணிக்கு இனி இந்த பிரச்னை வராது... பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News