மருதமலை திரைப்பட பாணியில் சம்பவம் செய்த பெண்.. திடுக்கிடும் புகார்கள்!

சிர்காழி அருகே 4 பேரை திருமணம் செய்து மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். 

Written by - R Balaji | Last Updated : Jan 27, 2025, 12:13 PM IST
  • 4 பேரை திருமணம் செய்த பெண்
  • கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்
மருதமலை திரைப்பட பாணியில் சம்பவம் செய்த பெண்.. திடுக்கிடும் புகார்கள்!  title=

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை ஊராட்சிக்கு உட்பட்ட குளங்கரை தெருவை சேர்ந்தவர் ஜீவா மகன் சிவசந்திரன்(27). இவர் தனியார் வங்கியில் குழு கடன் வசூல் செய்யும் பணியில் இருந்து வருகிறார். இந்த நிலையில், சிவசந்திரனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

அப்போது நிஷாந்தி என்பவர் தான் எம்பிபிஎஸ் எம்.எஸ். படித்துவிட்டு டாக்டராக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் வேலை பார்த்து வருவதாக தன்னை அறிமுகம் செய்து கொண்டு இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 20ஆம் தேதி சீர்காழியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆடம்பரமாக சிவசந்திரனுக்கும் நிஷாந்திக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. 

போட்டோவால் சிக்கிய பெண்

இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்தது. இதைக்கண்ட மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி அருகே புத்தூர் வாய்க்காங்கரை தெருவை சேர்ந்த தங்கராசு மகன் நெப்போலியன்(34) என்பவர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் ஒன்று செய்தார். 

மேலும் படிங்க: போலி பாதாமை எப்படி கண்டுபிடிப்பது?

அந்த புகாரில், "கடந்த 2017ஆம் ஆண்டு தனது பெயர் மீரா என்றும் தான் அரசு வேலை செய்து வருவதாகவும் கூறியதன் பெயரில் அவரை காதலித்து நான் திருமணம் செய்து கொண்டு கடலூர், சிதம்பரம், சென்னை ஆகிய ஊர்களில் வசித்து வந்தோம். 

கடந்த 2021ஆம் ஆண்டு சென்னையில் வசித்து வந்தபோது ஒன்றும் சொல்லாமல் என்னை விட்டு சென்று விட்டார். அதன் பிறகு அவரை நான் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் மீரா சீர்காழி சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்" என தெரிவித்திருந்தார். 

திடுக்கிடும் தகவல்கள் 

புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா ஆகியோர் வழக்கு பதிவு செய்து லட்சுமி என்கின்ற நிஷாந்தியை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் சம்பவம் தெரிய வந்தது.

விசாரணையில், கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி பழையார் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கு முறைப்படி கடந்த சுமார் 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தர்ஷன் என்கின்ற மகனும், ரேணுகா என்கின்ற மகளும் உள்ளனர். 

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டதால் பெண்குழந்தையை இறந்து போன கணவரின் அண்ணன் ஜெயக்குமார் பராமரிப்பில் விட்டுவிட்டு ஆண் குழந்தையை இவர் கொடியம்பாளையத்தில் உள்ள அம்மா வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளார். 

பின்னர் தனது பெயரை மாற்றிக் கொண்டு 2017ஆம் ஆண்டு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நெப்போலியன் திருமணம் செய்துவிட்டு 2021ஆம் ஆண்டு தலைமறைவாகி மீண்டும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிதம்பரம் கோல்டன் நகரை சேர்ந்த நடராஜன் மகன் ராஜா என்பவரை சந்தித்து நிஷாந்திதான் எம்பிபிஎஸ் எம்.எஸ். படித்து விட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் டாக்டராக பணிபுரிவதாக கூறி குடும்ப நடத்தியுள்ளார். 

பின்னர் தன்னை கோயமுத்தூர் மாவட்டத்திற்கு பணி மாற்றி விட்டதாக கூறி தலைமறியாகி உள்ளார். இதே போல் ஈரோடு மாவட்டத்திலும் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலை போலீசார் பலபேரை பல பெயர்களில் கூறி  ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட லட்சுமியை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் சீர்காழியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிங்க: சைஃப் அலி கான் தாக்குதலில் திடீர் திருப்பம்.. கன்பியூஸ் ஆன போலீஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News