எடையை குறைக்க காலை-இரவு ‘இதை’ சாப்பிட வேண்டும்! கரீனா கபூர் டயட்டீஷியன் டிப்ஸ்..

Kareena Kapoor Dietitian Tips For Weight Loss : பிரபல நடிகை கரீனா கபூரின் உடல் எடை குறைப்பு ரகசியம் குறித்து அவரது டயட்டீஷியன் பகிர்ந்துள்ள விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Jan 26, 2025, 05:19 PM IST
  • கரீனா கபூர் டயட்டீஷியன்
  • எடை குறைக்க டிப்ஸ்..
  • என்னென்ன சாப்பிட வேண்டும்?
எடையை குறைக்க காலை-இரவு ‘இதை’ சாப்பிட வேண்டும்! கரீனா கபூர் டயட்டீஷியன் டிப்ஸ்.. title=

Kareena Kapoor Dietitian Tips For Weight Loss : நாம் இருக்கும் டயட் நமது உடல்நலம், சருமம், தோற்றம் என அனைத்தையும் மாற்றும். புரதச்சத்து நிறைந்த டயட் இருப்பதால் நாம் உடல் நல பிரச்சினைகளிலிருந்து மீள்வதோடு இனி அவை வராமல் தடுக்கவும் செய்யலாம். ஒரு சிலர் நோய் பாதிப்புகளில் இருந்து தப்புவதற்காக டயட் இருப்பர். பலர் வெயிட் ஏறுவதற்கும் வெயிட் குறைவதற்கும் டயட் இருப்பர். அப்படி பிரபல நடிகை கரீனா கபூரும் தனது உடல் நலனை பார்த்துக் கொள்வதற்காக டயட்டில் இருப்பார். உணவே மருந்து எனும் கொள்கையை உடைய கரீனா, சாப்பிடாமல் இருப்பதால் உடல் எடை குறைவதில்லை எனும் கருத்தை கொண்டவர்.

கரீனா கபூரில் டயட்டீஷியன்: 

உடல் எடை குறைப்பில் நாம் சாப்பிடும் உணவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது நமக்கு தெரியும். இதனால் எதை சாப்பிட்டாலும் அளவுடன் பார்த்து சாப்பிட வேண்டும். ஒரு சிலரால் இந்த டயட்டை சரியாக பராமரிக்க முடியாது. இதனால் டயட்டீஷன், ட்ரெயினர் உள்ளிட்டோரிடம் உதவி பெறுவர். 

பொதுவாக நடிகர்கள் அனைவருமே தங்களின் உடல் நலனுக்காக மன நலனுக்காக என சில மருத்துவர் களை அல்லது ட்ரெயினர்களை வைத்திருப்பர். இவர்களிடம் கலந்தாலோசித்த பின்னரே என்னை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ன எடுத்துக்கொள்ளக்கூடாது என்று முடிவு செய்வார். அப்படி கரீனா கபருக்கும் ஒரு டயட்டீஷன் இருக்கிறார். அவரது பெயர் ருஜூட்டா தவேகர். அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில டயட் குறிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். 

டயட் குறிப்பு..

கரீனா கபூர் டயட்டீசியன் வெளியிட்டு இருக்கும் டயட் குறிப்பில் இடுப்பின் அளவை குறைக்க, வெயிட் லாஸ் செய்ய என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளாராம். நம் வாழ்க்கை முறையுடன் சமநிலையுடன் இருக்கும் வகையில் இந்த டயட் இடம்பெற்றிருப்பதாக அதை படித்தவர்கள் கருதுகின்றனர். 

காலையில் செய்ய வேண்டியது: 

காலையில் எழுந்தவுடன் 10-15 நிமிடங்களுக்குள் நாம் என்ன சாப்பிடுகிறோமோ அது நமது மெட்டபாலிசத்தின் அளவு அதிகரிக்கும் என கரீனா கபூர் இன் டயட்டீஷியன் தெரிவித்துள்ளார். வெறும் வயிற்றில் டீ இல்ல அல்லது காபி குடித்தால் வயிறு பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே இயற்கை பழங்களை சாப்பிடலாம் என குறிப்பிட்டு இருக்கிறார். அப்படி இல்லை என்றால் ஊற வைத்த பாதாம், வால்நட் ஆகியவை சாப்பிடலாம். இது உடலுக்கு தேவையான புரதச்சத்தை அளித்து நம்மை ஆக்டிவாக வைத்துக் கொள்ளும். 

இயற்கை பானம்:

காலையில் சாப்பிட்டவுடன் அதன் பிறகு ஏதாவது snacks சாப்பிட வேண்டும் என தோன்றும். அப்படி தேவையற்ற உணவுகளை நாம் சாப்பிடாமல் இருக்க, இளநீர் அல்லது பழச்சாறுகளை குடிக்கலாம். இது உடல் எடை குறைப்பிற்கு உதவுவதோடு அதிக பசி எடுப்பதையும் தடுக்கிறது. உடலில் நீர் சத்தும் நிலைத்து நிற்கும். 

காலை உணவு:

காலையில் உடலுக்கு எனர்ஜி கொடுக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். வீட்டில் சமைத்த சூடான உணவுகளை சாப்பிடுவது நல்லது. ரொட்டி, கிச்சடி, தோசை, இட்லி, சீரியல்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். ஹெல்தியாக சாப்பிடுவது நம்மை அந்த நாள் முழுவதும் துடிப்புடன் இருக்க செய்யும்.

மதிய உணவு: 

மதிய உணவை 11 மணியிலிருந்து 1 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும். இது குறித்து பேசும் டயட்டீஷியன் ருஜூட்டா, கண்டிப்பாக ஒரு கிண்ணம் காய், கொஞ்சம் சாதம், பருப்பு தால் மற்றும் சப்பாத்தியை நினைத்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார். வெயில் காலங்களில் ராகியை சேர்த்துக்கொள்ள சொல்கிறார். 

மாலை சிற்றுண்டி: 

மாலை 4-6 மணிக்குள் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என தோன்றினால், டீ அல்லது காபி குடிக்கலாம் என கூறுகிறார். ஆனால் அதில் கலக்கும் பால், முழு கொழுப்பு நிறைந்த பாலாக இருக்க வேண்டும் என கூறுகிறார். நட்ஸ், முளைகட்டிய பயிர் ஆகியவையும் நல்ல சிற்றுண்டிதான்.

இரவு உணவு: 

இரவில் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வராது. உறங்க செல்வதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் முன்பே டின்னரை சாப்பிட்டு விட வேண்டும். தோராயமாக 7 அல்லது 8.30 மணிக்குள் சாப்பிட வேண்டும். அதிலும் இரவு டின்னர் எளிதில் செரிமானம் ஆகும் உணவாக இருப்பது நல்லது. இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என எதை சாப்பிட்டாலும் அதை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | 18 கிலோ குறைந்த நீடா அம்பானி-உதவிய டிரைனர் கொடுக்கும் 3 முக்கிய வெயிட் லாஸ் டிப்ஸ்!

மேலும் படிக்க | 6 மாதத்தில் 20 கிலோ குறைத்த கங்கனா ரனாவத்! பெரிய டயட் எல்லாம் இல்லை-சீக்ரெட் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News