முகம் பளபளப்பாக இருக்க வேண்டும், முகத்தில் ஒரு பொலிவு இருக்க வேண்டும் என ஆசைப்படாடத பெண்கள் இருக்கமாட்டார்கள். ஆனால், பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கு அதிக உழைப்பு தேவை என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். இதற்கான பல்வேறு செயற்கை தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் சருமத்தில் பொலிவைக் கொண்டு வருவது கடினம் அல்ல. உங்கள் சருமத்தின் தனிப்பட்ட தேவைகளைப் புரிந்துகொண்டு, சருமத்திற்குத் தகுதியான பராமரிப்புகளை தினமும் அதற்கு கொடுக்க வேண்டும். உங்கள் சருமத்திற்கு ஏற்ப பராமரிப்பு முறையைப் பின்பற்றினால், நீங்கள் ஒளிரும் சருமத்தைப் பெறலாம்.
இதற்கு அதிகமாக சிரமப்படத் தேவையில்லை. நமது சமையலறை அலமாரியில் இருக்கும் பொருட்களை வைத்து இயற்கையான முறையில் தோலை பராமரித்து பொலிவு பெற முடியும். ஒரே மாத்தத்தில் ஒப்பற்ற பொலிவு பெற உதவும் சில உதவிக்குறிப்புகளை இந்த பதிவில் காணலாம்.
ரோஸ் வாட்டரின் பயன்பாடு:
ஒரு பாத்திரத்தில் ரோஸ் வாட்டரில் காட்டன் பேட்களை ஊறவைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். முதலில் தோலைத் துடைக்க அவற்றைப் பயன்படுத்துங்கள். அதே நேரத்தில், இந்த காட்டன் பேட்களைக் கொண்டு முகம் முழுவதும் வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும். பின்னர் ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட்டை தோலில் ஒத்தி எடுக்கவும்.
மேலும் படிக்க | இந்த 4 அறிகுறிகளை இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்
ஃபேஸ் மாஸ்க்:
முட்டைக்கரு மாஸ்க்:
முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேன் கலந்து முகத்தில் தடவவும். இதற்குப் பிறகு, 20 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் கொண்டு முகத்தை கழுவவும்.
தேன் மற்றும் எலுமிச்சை சாறு மாஸ்க்:
இதில் சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். இந்த கலவையை 20 நிமிடங்களுக்கு முகத்தில் தடவவும். பின்னர் முகத்தை கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால் முகம் பொலிவு பெறும்.
ஃபேஷியல் ஸ்க்ரப்பின் பயன்பாடு:
வாரத்திற்கு இரண்டு முறை ஃபேஷியல் ஸ்க்ரப் பயன்படுத்துங்கள். இது சருமத்தில் அதிசயங்களைச் செய்கிறது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.
செய்முறை- வால்நட் பொடி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தை ஸ்க்ரப் செய்யவும். கலவையை முகத்தில் தடவி சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பின்னர் சிறிய வட்ட இயக்கங்களில் மெதுவாக முகத்தில் மசாஜ் செய்யவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இரவில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR